பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தடுமாறவும் கூடாது. அதே சமயத்தில் முன்னேறித் தான் போயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவோ முரண்டு பிடிக்கவோ கூடாது. அதல்ைதான், இடம் பார்த்து நட என்று கூறுகிருேம். அந்த முட்டுக்கட்டையை எவ்வாறு அகற்றிச் செல்வது என்று ஆராய வேண்டும். ஓடிவரும் ஆருனது சிறிய மேடாக இருந்தால் கடந்து போகிறது. பெரிய குன்ருக இருந்தால் சுற்றி வளைந்து போகிறது. அதுபோல்தான், இடத்திற்கேற்ப ஆட்ட முறையை மாற்றிக் கொள்ளவும். பின்புறமாக வரலாம், பக்கவாட்டில் பாங்கருக்குப் பங்தை வழங்கிவிடலாம். திசையை மாற்றிக்கொண்டு சுழல் தப்படியின் மூலம் செல்லலாம். தங்களது திசையை மாற்றிக் கொள்வதுபோல பாவனை செய்து எதிரியை திசை 'திருப்பிப் பாங்கரிடம் பக்குவமாக வழங்கித் தாக்குதலைத் தொடரலாம் என்ற முறையில் இருக்கவேண்டும். இடைவெளி: எதிர்க் குழுவினர் தடுப்பு முறையினைத் தகுந்த முறையில் சிறந்த வழியில் கடைப்பிடிக்கும் பொழுது, முன்னேறிச் செல்கின்றவர்கள் உணர்ந்து கொள்வதுடன், உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது. பந்தை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று கை மாற்றி வழங்கிக் கொண்டிருக்கும்பொழுதும், அவர்கள் அமைத்திருக்கின்ற தடுப்பு முறையிலே இடைவெளியை ஏற்படுத்தி, அந்த இடைவெளியை அவர்கள் உணர்வதற். குள்ளாகவே, அந்த இடைவெளிக்குள் பந்துடன் நுழைந்து முன்னேறிவிட வேண்டும். இதற்குப் பொறுமை, கிதானம், கிதர்சனம் மிக மிக அவசியம். s திட்டமிட்டு செயல்படுவதும், சிறந்த குழு ஒற்றுமையும் இருந்தால்தான் இடைவெளி ஏற்படுத்தும் தன்மையில் வெற்றி பெறமுடியும்.