பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 பந்தைப் பார்! பிடி : இவ்வாறு முன்னேறி வந்து, வாய்ப்பினை ஏற்படுத்தி, வளையத்திற்குள் பந்தை எறிய வாட்டமான சூழ்நிலை அமைத்து,வளையம் நோக்கிப்பந்தைக் குறிபார்த்தும் எறிந்தாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். எறிகின்ற பந்தானது. எல்லா தடவையும் வளையத்திற்குள் புகுந்து வெற்றி எண்னேக் கொடுத்து விடும் என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை. வெற்றி பெறலாம். வெற்றி பெறவில்லை என்ருல் என்ன செய்வது? வளையத்திலோ, பின் பலகையிலோ பந்து பட்டு மோதித் திரும்பி வரும்பொழுது, எதிர்க் குழுவினர் அதனைப் பிடித்துவிட்டால் என்ன ஆகும்: அவர்கள் கைவசம் பந்து போய்விட்டால், பிறகு விரட்டி அல்லவா பிடிக்க வேண்டும்! ஆகவே, எதிரிகளிடம் பந்து சிக்கிக் கொள்ளாதவாறு, அவர்கள் அந்த முயற்சியில் வெற்றி பெருதவாறு தடுப்பது. தாக்கும் குழு ஆட்டக்காரர்களது கடமையாகும். இந்த உண்மையை உணர்ந்து கொள்கின்ற ஆட்டக் காரர்கள், தாங்கள் பங்தைக் பிடிப்பதில் முதல் ஆட்களாக இருந்து ஆடவேண்டும். அதற்குரிய பழக்கமானது, பந்துடனே முன்னேறுவதற்குரியபயிற்சியையும், இலக்கான வளையம் கோக்கி அடிக்கடி முற்றுகையிடுதற்குரிய குணத் தையும் அதிகமாக வளர்த்துவிடும். ஆகவே, வளையம் நோக்கி எறிகிற ஒவ்வொரு பந்துக்கும் எறிபவர் அல்லது அவரின் பாங்கர் பின்னேக்கிச் சென்று பங்தைப் பார்த்துப் பிடித்தாடுவதுதான் சிறந்த ஆட்ட மாகும. * = s வாங்கு! வழங்கு1.: எப்பொழுதெல்லாம் தனது பாங்கருக்கு பந்தை வழங்குகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் உடனே அவர்களுக்குப் பந்தைக் கை மாற்றி விடுகின்ற மனப்பக்குவம் பெற வேண்டும்.