பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அப்பொழுதுதான், ஆட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும் ஏற்படும். வேண்டிய வெற்றி பெறும் சூழ்நிலைகளையும் உண்டாக்கும். வீணே, தானே, தனியாகப் பந்தைத் தரையில் தட்டிக் கொண்டிருப்பது சக ஆட்டக்காரர்களுக்கு மனச் சங்கடத் தையும், இனம்புரியாத எரிச்சலையும் உண்டு பண்ணு வதுடன், எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் தங்கள் தடுப்பு நிலையை சரிசெய்து கொள்ளவும், தீவிரமாகத் தாக்கி ஆடவும் வகை செய்துவிடும். ஆகவே, பந்துடன் ஒடுதல் என்பதை முக்கியம் என்று கருதாமல், பாங்கருக்குப் பந்தை வழங்கி, இலக்கை நோக்கி முன்னேறுவதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கிக் கிடக்கிறது என்பதை உணர வேண்டும். பாங்கரும் தன் பந்தை வாங்குவதற்கேற்ற வகையில் கின்று ஆடவேண்டும். தேவையானல்,எதிராளி அறியாமல், கேட்டே பெறவும் வேண்டும். இந்த ஒற்றுமையான பணியில்தான் உயர்வு கிடைக்கும். பாங்கரின் பணி: தன் கையிலே பந்தை வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர் வளையத்தில் பங்தை எறியும் வாய்ப்பை எதிர்நோக்கி, இங்குமங்கும் பந்தைத் தட்டியவாறு ஒடிக் கொண்டிருக்கும் நேரத்தில். அவருடைய பாங்கர் அங்கு மிங்கும் ஒடிச்சென்று, எதிர்க்குழுவினரின் கவனத்தை மாற்றிவிட முயல வேண்டும். அவர்களின் கவனம் திரும்பி விட்டால், திசைமாறி விட்டால், பந்துடன் இருப்பவர் எளிதாகப் பங்தை வளையத் திற்குள் எறிந்து விடுவார். இல்லையென்ருலும்பாதகமில்லை. அங்குமிங்கும் சுற்றி வரும்பொழுது தனது ஆட்டக்காரர் களில் ஒருவர் தனியாக விடப்பட்டிருப்பார் அல்லவா!