பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அவரிடம் பந்தைத் தந்து எறியச் செய்து வெற்றி எண்ணேப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பாவது கிடைக்குமே! இந்த முறையைத் தாக்கும் குழுவோர் பின்பற்றியே ஆடுவது, வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பை எளிதாகப் பெறமுடியும் என்று உணரவும். திரையிடு: முன் கூறிய முறைகளில் தடுப்பு அதிகமாக இருந்து, பந்துடன் முன்னேற இயலவில்லை என்கின்ற பொழுது, தன்னுடைய பாங்கருக்குத் தந்து விடலாம். தந்து விடுவதுடன் தனது கடமை முடிந்து போய் விட்டது என்ருே, அவர் எறிந்த பிறகு பலகையில் பட்டுப் பந்து திரும்பினல் பார்த்துக் கொள்ளலாம் என்ருே வாளா இருக்கக்கூடாது. பாங்கரிடம் பந்தைக் கொடுத்த பிறகு அவர் அருகில் யாரும் வரமுடியாதவாறு நின்று, எதிரிகளேத் தடை செய்வது போல திரையிட்டு, திசைமாற்றி, பாங்கரை சுலப மாக வளையத்திற்குள் எறியும் தன்மையை உண்டாக்க வேண்டும். வேகமும் லாவகமும்: விளையாட ஆரம்பித்த உடனேயே, ஆட்டத்தில் வேகமும், விறுவிறுப்பும் இருக்கவேண்டும். தாக்குதல் அதிகமாகவும், முற்றுகை பலத்தளவில்இருக்கும் பொழுதுமே எதிரிகள் தங்களைக் காத்துக்கொள்ள முன வார்கள். அதே சமயத்தில் அவர்கள் தாக்குகின்ற முய ற்சி யிலும் சிறிது பின்வாங்குவார்கள். TGIGa, G03ంు கூறிய தாக்கும் முறைகளைத் தாக்கி ஆடும் குழு பின்பற்றவேண்டும். பயன்படுத்த வேண்டும். பயன்பெறவும் வேண்டும். இனி, தடுத்தாடும் முறைகளைக் காண்போம்.