பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தடுத்தாடும் முறை (Defense) தடுத்தாடும் ஆட்டத்திற்குத் தேவை சுறுசுறுப்பு (Alertness). o —do glotståbo (Balance); G,gör sósuu logorståsv. (Concentration) அத்துடன் இன்னும் ஒன்று, அதுதான் . ஆட்டம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து, மிகு வேகமாகஆடப்படுகின்ற ஆட்டம் கூடைப்பந்தாட்டமாகும். எப்பொழுது பந்துவரும், எப்பொழுது பந்தை அனுப்ப லாம். எப்படி ஆடலாம் என்று எண்ணுவதற்கே நேரமில் லாதவாறு ஆடப்படுகின்ற ஆட்டத்தில், பந்து தன்னிடம் இருக்கும்பொழுது எதிரி அதைக் கவர முயற்சிக்கின்ற பல முயற்சிகளைத் தடுத்தும். குறிபார்த்து வளையத்திற்குள் பந்தை எறிய முயலும் போது தடுத்தும்-அவர்களுக்குள் வழங்கிக் கொள்கிற பங்தை இடைமறித்து எடுத்தும் அடுத்தடுத்து ஆவன செய்ய வேண்டும். ஆகவே, தடுத்தாடுவோர் தன்னிலையில் தளராது. தவருது, தடுமாருது காத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்ருகும். யாரைத் தடுக்கக் காவல் புரிகின்ருேமோ, அவர் எங்கெங்கு போகிருரோ, எவ்வாறெல்லாம் முன்னேறு வதற்காக இயங்குகின்ருரோ, முயல்கிருரோ, அவ்வாறெல் லாம் பின் தொடரும் தன்மையில், தானும் அவரே போல் இயங்கும் பொழுது தள்ளாடி விழாமலும் சமநிலை இழக்காமலும் இயல்பாக இருக்க வேண்டும். மற்றவர்களின் ஆட்டத்தைப் பற்றியோ, பார்வை. யாளர்கள் பேச்சையோ, சிரிப்பையோ பற்றி கேளாச் செவியுடன், கான விழிகளுடன் அவருடனே தொடர்ந்து செல்கின்ற ஒன்றிய மனநிலை ஆளுக்கு ஆள் (Man to Man) காவல் முறைக்குத் தேவையாகும். முன்னேறி வரும் எதிர்க் குழுவினரைத் தடுப்பதற்காக நிற்பவர் குறைந்தது 16 அங்குலத்திலிருந்து 21 அங்குலம்