பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வரை தூரத்திற்கு ஏற்ப, கால்களே அகலமாக விரித்து வைத்து நிற்க வேண்டும். ஒருகால் சற்று முன்னதாக இருப்பது போல் நின்ருலும் நல்லதுதான். வலதுகால் முன்னிருந்தால் வலது கையையும், இடது காலே முன் வைத்திருந்தால் இடது கையையும் உயர்த்தி) வைத்து கின்று தடுத்தலுக்குரிய கடமையைச் செய்யலாம். நடு ஆடுகளத்தில் நின்று காவல் செய்யும் பொழுது, எந்தக் கை, எந்தக் கால், எந்தப் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்தந்த சூழ்நிலைக்கேற்ப, அவரவர் வசதிக்கேற்ப நிற்கலாம். அவசரத்தில், காலை அதிகமாக விரித்து வைத்துக் கொண்டு நிற்பதும், உணர்ச்சிவசமாகி, உடலை மிகவும் முன்னுக்கு வளைத்துக் கையை நீட்டி எதிரியை மடக்க முயல் வதும் தடுக்க முயல்வதும் இயலாத காரியமாகும். இது. எதிரியின் அசைவுக்கு, இயக்கத்திற்கேற்ப செயல்படாமல் தடுத்து விடுவதுடன், எல்லா முயற்சியையும் கெடுத்து விடும். - எனவே, கினைத்த மாத்திரத்தில் நடக்க, ஒட, பக்க வாட்டில் நகர, போன்ற இயக்கங்களை நொடியில் நிறை. வேற்றத் தயாரான நிலையில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். எப்பொழுதும், தான் பாதுகாக்கின்ற வளையத்திற்கும். முன்னேறி வரும் எதிராளிக்கும் இடையில் நின்றுதான் தடுக்க முயல வேண்டும். - எதிராளி சுழல் தப்படி எடுத்தாடும் போதுதான் அவரிடமிருந்து பந்தைக் கவர அல்லது தட்டிவிட, அவரது பின்புறமாக அல்லது பக்கவாட்டில் செல்லலாம். எப்படியிருந்தாலும், காத்து கிற்கின்ற உம்மைக் நடந்து அவரைப் போகவிட்டு விட்ட்ால், நிச்சயம் வளையத்திற்குள் பந்தை எறிந்துவிடும் வேலையைக் கச்சிதமாகச் செய்து