பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விடுவார் என்பதால், உம்மைக் கடந்து செல்ல முடிந்தவரை அனுமதிக்கவே கூடாது. - பந்தைப் பிறரிடமிருந்து கவர்ந்து கொள்வது என்பது ஒர் அரிய கலையாகும். ஆற்றல் மிகு திறகுைம். தன்னிடமுள்ள பந்தை எதிராளிகளிடமிருந்து காத்துக் கொள்ள சிலர் நெஞ்சுக்குமுன் பிடித்திருப்பார்கள்.பாதுகாப் புக்காக இடுப்புக்குக் கொஞ்சம் கீழாகப் பிடித்திருப்பார்கள். அல்லது அடிவயிற்றின் மேலே வைத்து அழுத்திவைத்திருப் பார்கள். உயரமானவர்கள், தங்கள் தலைக்கு மேலே பங்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும், பின்னல் இருந்து தாக்கும் எதிராளிகளிடமிருந்து தப்பிக்க, கைகள் இரண் டையும் முன்புறம் எவ்வளவு நீட்ட முடியுமோ அந்த அளவுக்குத் துாரமாக நீட்டிப் பங்தைக் காத்துக்கொள்வார் கள். இன்னும் சிலர், அடிவயிற்றுக்கருகில் பதுக்கிக் கொள்வது போல, பந்தை வைத்து அணேத்தபடி குனிந்து கொள்வார்கள். இவ்வாறு காத்துக்கொண்டிருக்கிறவர்களிடமிருந்து, பங்தை எவ்வாறு கவர்ந்து கொள்வது என்ற திறனையும் கற்றுக் கொண்டால் தானே, ஆட்டத்தில் புகழுடன் பிரகாசிக்க முடியும்?! வளையத்திலோ அல்லது பின் பலகையிலோ பந்து மோதித் திரும்பும்பொழுது பிடித்துக்கொள்கின்ற ஒருவர், பங்தைப் பிடித்துக் கொண்டவுடன் கீழே காணும் மூன்று முறைகளில் பந்தைக் காத்துக் கொள்ள முயற்சிப்பார். முதலாவதாக, பங்தைத் தலைக்கு மேலேயே பிடித்துக் கொண்டிருப்பார். அப்படி பிடித்துக் கொண்டிருந்தால், அவர் தாவிக் குதித்துப் பங்தைப் பிடித்துத் தரைக்கு வந்து கின்றவுடன், உடனே தாண்டி, பந்தைத் தட்டி விட்டுக் கவர்ந்துகொண்டுவிட வேண்டும். இரண்டாவது முறையாக, பங்தைப் பிடித்ததும் இடுப்பை வளைத்து முன்பக்கமாகக் குனிந்து, பந்துடன்