பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கைகளை முன்புறமாக நீட்டிக் கொள்வது. இவ்வாறு அவர்கள் முன்புறமாகக் குனிந்திருந்தால், சரியான சமயம் பார்த்து முன்புறம் ஓடி, பந்தைத் தட்டிவிட வேண்டும். இதற்கு, திடீரெனப் பாய்ந்து முன்னேறும் திறமை வேண்டும். மூன்ருவதாக, சிலர் அடிவயிற்றுக்கருகில் பங்தை வைத்து பதுக்கிக் கொள்வார்கள். இவ்வாறு பதுக்கிக் கொண்டு, சுழற்தப்படி இட்டு முன்னேற நினைத்தால் அல்லது முயன்ருல், அவர் அடிக்கடி அதுபோன்ற சுழற்தப் படி இடும் நிலையில் எந்தப் பக்கம் திரும்புகிருர் என்பதை உன்னிப்பாகக் கவனித்து அந்தப் பக்கமாகக் கை நீட்டி மடக்குவதற்குரிய சூழ்நிலையில், அவருக்கு முன் சென்று. தயாராக நின்று கவர்ந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பந்தைப் பிறரிடமிருந்து கவர விரும்புகிற, வர்கள், எப்பொழுதும் எதிராளியை நோக்கி அவருக்கருகில் கின்று, அவர் பந்தைக் கவர்கின்ற நிலையிலே கிற்க வேண்டும். ஏன் முன்னே போய் தயாராக நிற்கவேண்டும்.என்ருல், அதற்கு காரணம் இருக்கத்தான் இருக்கிறது. அவர் பந்தைப் பிடித்துக் கொண்டு அடுத்தப் பக்கம் நகர, பந்துக்காக ஒடியவர் அவர் மேல் மோதிக்கொள்ள, இதல்ை உடல் தொடர்பு' என்ற தவறுக்கு ஆளாக நேரிடுமே! ஒடிய வேகத்தில் உடனே கிற்கமுடியாதல்லவா! 5முறை, தவறுக்கு உள்ளானல் ஆட்டத்தை விட்டல்லவா வெளியேற நேரிடும்! இன்னும் ஒரு குறிப்பை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். == எதிராளியிடமுள்ள பங்தை, நேரடியாகவே எதிரே கின்று போய் பிடுங்கக் கூடாது. அப்படிப் பிடுங்கும் பொழுது, அவரும் வலிந்து பற்ற அதல்ை-'பிடிநிலைப் பந்து' (Held Ball) ஏற்பட வழியாகிவிடுகிறதே! அதற்கும் ஒரு வழியிருக்கிறது. - எதிராளி கால்களே அகலமாக விரித்து வைத்துக் கொண்டு கின்ருல், பிடிப்பவர் ஒரு காலை அதன் நடுவில்