பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பிரதிபலிப்பு இவைகளுடன் கினைக்கின்ற இடத்திலே உடனே நிலைமாருமல் நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வளையத்திற்குள் பங்தை எறிய முயற்சிக்காமல், தன் பாங்கருக்கு வழங்குவதற்காகக் காத்திருக்கும் எதிராளியை, சிறிது குனிந்தவாறு கின்று. இடது கை அல்லது வலது கையை, (உள்ளங் கை பங்தைப் பார்ப்பதுபோல) பந்துக்கு அருகாமையில் வைத்துத் தள்ளுவதுபோல நின்று தடுக்கவும். பந்தைப் பெறும் இம்முயற்சியில் வெற்றிபெரு விட்டா லும், தன்னைமீறி அவர் பந்துட ன் ஒட அனுமதிக்கக்கூடாது. என்பதை மறக்கவே கூடாது. அவர் பந்தை எறியும் பாவனையில் அல்லது எறிகின்ற முயற்சியில் நிற்கும்பொழுது, இன்னும் அவர் அருகில் சென்று, முன்னைவிட கிமிர்ந்து நின்று, கையை பந்துக்கு மேலே உயர்த்தி, குதித் க எறிகின்ற முயற்சியைத் தடுத்து விடவேண்டும். தன்னை ஏமாற்றிவிட்டு பந்துடன் ஒடும் ஆட்டக்காரரை உடனே வேகத்தோடு சென்று தடுக்க முயல்வது முறை தான். ஆனல் தவறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, அதிகம் உயரே எழும்பாமல், தரை யோடு தரையாக நடப்பதுபோல விரைந்து முன்னே சென்று அவரைத் தடுக்க முயல வேண்டும். அவ்வாறு முயன்றும் முடியவில்லை என்ருல், அவர் எறியத் தயாராகும் வாய்ப்பினை (Position) அறிந்து, பந்து செல்லும் வழிதனைப் பார்த்து, கைகளே விசிறிபோல் அசைத்து வழிமறிக்க வேண்டும். 4. 輯 பின்னல் இருந்து பங்தைத் தடுக்க முயன்ருல் நிச்சயம் தவறுக்கு ஆளாகத்தான் நேரிடும். அதல்ை, நேரே இருந்த இடத்தில் இருந்து தாண்டிக் குதித்தே, பந்துக்கு மேலே கையை உயர்த்தி வைத்திருப்பது ஒன்றே சிறந்த முறை -யாகும. . - .