பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மேலே கூறியவை எல்லாம் எல்லைக் காவல் (Zone Defense) முறைக்கு ஏற்றவைகளாடும். ఇఅఉఅ <absii” (Man to Man) ஆளுக்கு ஆள் காவல் முறை என்பது, ஒவ்வொரு. ஆட்டக்காரரையும். ஒவ்வொரு ஆட்டக்காரர் பார்த்துக் கொண்டு தடை செய்து காவல் புரிந்து ஆடவேண்டிய ஆட்ட முறையாகும். - ஆளுக்கு ஆள் காவல் முறையில், எப்பொழுதும். 'ஆளத்தான் காவல் செய்ய வேண்டும், பந்தை அல்ல' என்பதை. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தான் காவல் செய்கின்ற ஆளின் இயக்கம் எங்கெல்லாம். எப்படி எப்படி போகும் என்பதைப் பரவலாகப் பார்வையைச் செலுத் தியவாே ற. எதிரியின் மேலே கடைக் கண் பார்வையைப் பதித்தவாறே. காவல் செய்ய வேண்டும். கண் இமைக்கும் நேரத்திற்குள்ளேயே, காக்கப்படு கின்ற ஆள் வேறு திசையில் பாய்ந்துபோய் விடுவார் என்ப தால், கண்கொத்திப் பாம்பைப்போல கடுமையாக, கூர்மை யுடன் கண்காணிக்க வேண்டும். ஆட்டம் தொடங்கிய உடனேயே, தான் காக்கின் ,ID" ஆளின் இயக்கங்கள், அசைவுகள், பந்து வழங்கி வாங்கி ஆடும் முறையிலே உள்ள பழக்க வழக்கங்கள், முன்னேறும் வழிமுறைகள், குறிபார்த்துப் பங்தெறியும் ஆற்றல் இத்தனையையும் கண்டுகொள்ள வேண்டும். இப்படித் தெரிந்து கொள்வதானது, அந்த ஆளின் இயக்கத்தை முன்கூட்டியே எதிர் நோக்கித் திட்டமிட்டு: மறிக்கும் தன்மையை, திறமையை வளர்த்துவிடும். இப்படி ஆடுவதானது, எதிரியின் இயலாத் தன்மையை, காப்ப வரின் தனித்திறமையைக் காட்டுவதுடன், ஆட்டம் எதிர் பார்த்தது போலவே சாதகமாகவே அமையும்.