பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 மெதுவாக பந்துடன் ஓடி வந்து, துார இருந்தே குறிபார்த்து வளையத்தில் எறியும் ஆட்டக்காரரை. அருகாமையில் நெருங்கியிருந்தே காவல்புரிய வேண்டும். வேகமாக ஓடிவந்து சரியாகக் குறிபார்த்து எறியும் ஆற்றல் உள்ளவரைக் காக்கின்றவர், கொஞ்சம் தூரத்தி லிருந்தேதான் காவல் புரியவேண்டும். ஏனென்ருல், சிறிது தூரத்தில் இருந்தால்தான், கழுவிச் சென்ருல்கூட, கிழ லாகத் தொடர்ந்து செல்ல முடியும். * எதிரியாக இருப்பவர் ஏைேதானேவென ஏதுமறியாத வர்போல் கின்ருலும், இயங்கிலுைம், அது உண்மையல்ல. வெறும் பாவனே. பாசாங்குத்தனமுமாகும். அதைக் கண்டு, அவரைக் காத்து நிற்பது வீண் வேலை என்று கருதிக் கொண்டு காவலை தளர்த்திவிடக் கூடாது. - இந்த அசந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவர் முன்னேறிச் சென்றுவிடுவார் என்பதால், எப்பொழுதும் ஆளேயே காவல்புரிய வேண்டும். அதுதான் இந்தக்காவலின் முக்கிய நோக்கமாகும். இனி, தடுத்தாடும் ஆட்டக்காரர்களுக்குத் தேவையான ஒருசில குறிப்புக்களே கூறுவோம். தடுத்தாடுவோர் எப்பொழுதும் பந்தயக் குதிரையைப் போல முன்னேறும் தயார் நிலையிலேதான் கின்று கொண் டிருக்கவேண்டும். தன்னமீறி, எதிராளியை முன்னேறிச் செல்லுமாறு விட்டுவிடக்கூடாது. அவ்வாறு மீறிச் சென்றுவிட்டாலும், வளேயத்திற்குள் குறிபார்த்துப் பங்தை எளிதாக எறியவிடக்கூடாது. தன்னை மீறிவிட்டு, தகுந்த ஓர் இடத்தில் கின்று, வாய்ப்புடன் வசதியாக இருந்து, குறிபார்த்து எறியும் சாவகாசமான சூழ்நிலையையும் எதிராளிக்குத் தந்துவிடக் அடடாது. கூடைப்-6