பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 எதிரியும் அவர் பாங்கரும் தங்களுக்குள் பந்தினை வாங்கவும் வழங்கவும் போன்ற செயல்களைச் சுலபமாகச் செய்துகொள்ள இடமே அளிக்கக்கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம், நெருக்கமாக கின்று எதிராளியின் முயற்சிகளைத் தடுத்துக்கொண்டே யிருக்கவேண்டும். குழு ஒற்றுமை தேவை என்பதால், எப்பொழுதும் தனது குழுவின் அங்கத்தினர்களைக் கலந்து அதற்கேற்ப கடந்துகொள்ள வேண்டும். இரண்டு கைகளேயுமே உயரே தூக்கித் திரையிடுவது போல அசைத்துத் தடுக்கும் பழக்கம் கூடாது. அது உடல் சமகிலையை இழக்கச் செய்துவிடுவதுடன், பக்கவாட்டில் கையை வீசி தடுத்தாடும் ஆற்றலைத் தடுத்துவிடும். ஒரு கையை மேலே உயர்த்தி அசைக்கவும், இன்னெரு கையை தோளமைப்புக்குக் கீழே, ப்க்கவாட்டில் தொங்க விட்டு, இடுப்புக்கு மேலே உள்ள உடல் பகுதியை சிறிது முன்னுக்குத் தள்ளியவாறு தடுத்தாட கிற்பது நல்லது. தீர்மானமாக, தீவிரமாக, உறுதியாக கின்று தடுக்க வேண்டும். தன்னம்பிக்கையை எப்பொழுதும் இழக்கக் கூடாது. தாழ்வு மனப்பான்மையும் தம்மிடம் தலை காட்டவே கூடாது. எதிராளி பங்தைக் குறிபார்த்து எறிய விடாமல், எப்படியாவது விதிக்குட்பட்ட முறையில் தடுத்துவிட வேண்டும். - ஏமாற் றிச் செல்லும் எதிராளியைத் தொடர்ந்து, பின்னல் சென்று. முன்னேற்றத்தைத் தடைசெய்ய முயல வேண்டும். i