பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

131


செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்க மரபைச் சேர்ந்த மன்னர்கள் விசய நகரப் பேரரசின் தலைமையின் கீழ், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டின் சில பகுதிகளை ஆண்டனர். இவர்களது செல்வாக்கு 1370 தொட்டு 1648 வரைக்கும் ஓங்கியிருந்த தெனலாம். இம் மன்னர்களுள், கோபன்னா நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர், அச்சுத இராமச்சந்திர நாயக்கர், வேங்கடப்ப நாயக்கர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; இவர்களுள்ளும் கிருஷ்ணப்ப நாயக்கரே {1570 - 1616) மிகவும் சிறப்புற்று விளங்கினார்.

ஏகம்ப வாணன்

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் மூலைக்கு மூலை இன்னும் சிலர் ஆண்டதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவர் வாணர் மரபினர். இந்தக் காலத்தில், திருக்கோவலூர் வட்டத்திலுள்ள ஆற்றூரைத் தலைநகராகக்கொண்டு ‘ஏகம்ப வாணன் என்னும் மன்னன் பெருஞ் சிறப்பு..... ன் ஆண்டான். திருமுனைப்பாடி நாட்டிற் குள்ளேயே இவன் ஆண்ட பகுதிக்கு ‘மகத நாடு’ என்ற பெயர் வழங்கப்பட்டது.

பீஜப்பூர் சுல்தான்

மொத்தத்தில் செஞ்சி நாயக்கர்கட்குப் பின் 1648 முதல் 1677 வரை திருமுனைப்பாடி பீஜப்பூர் சுல்தான் கைக்குள் அகப்பட்டுக் கிடந்தது. சுல்தானின் ஆணையர்களான சையது நாசிர்கானும், நாசிர் முகமது கானும் ஒருவர் பின் ஒருவர் முறையே ஆட்சி நடத்தினர். இந்த ஆட்சிக் காலத்தில்தான் கடலூர் இஸ்லாமாபாத்’ எனப் பெயர் வழங்கப்பட்டிருந்தது.

மராத்தியர் பங்கு

திருமுனைப்பாடி நாட்டு ஆட்சியில் மராத்தியர் பங்குக்கும் குறைவில்லை . மராத்தியப் பேரரசர் சிவாஜி 1677 தொட்டு 1698 வரை, சந்தாஜி, சம்பாஜி முதலிய உதவியாளர்களைக் கொண்டு இந்தப் பகுதியை ஆண்டார்.

மொகலாயப் பேரரசு

1698ஆம் ஆண்டு சனவரித் திங்களில் மராத்தியர் களிடமிருந்து நாடு ஔரங்கசீப்பின் கைக்கு மாறியது. ஔரங்கசீப்பின் உதவியாளர் கையில் தென்னார்க்காடு மாவட்டம் சிக்கியது. 1698 முதல் 1700 வரை ஒளரங்கசீப்பால்