பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை அரசுகள்

159


[1] ஒரு கல் வெட்டின் பாடல்களில், கோப்பெருஞ் சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனையும் அவன் அமைச்சனையும் சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தி வைத்திருந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கல்வெட்டுப் பாடலில், கோப்பெருஞ் சிங்கனைக் குறிக்கும் பெயர்களாக, அவனி நாராயணக் காடவப் பெருஞ்சிங்கன், நிருபதுங்க சீயன், திரிபுவனராசாக்கள் தம்பிரான், மல்லைவேந்தன் முதலிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இவன் தமிழ் வாழப் பிறந்தவனாகப் புகழப்பட்டுள்ளான்.

நினைவுக் குறி

பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராய குல மரபின் பெருமன்னனாய்ப் பீடு பெருமையுடன் முப்பத்தேழு ஆண்டுகள் நாடாண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனின் நினைவுக் குறியாக, அவனது தலைநகராக இருந்த சேந்தமங்கலம் என்னும் ஊரில் அவனால் திருத்தி அமைக்கப்பட்ட கோட்டையும் கோயிலும் இடிந்தழிந்த நிலையில் இன்னும் இருப்பதைக் காணலாம். கீழே காண்பது பாழடைந்த சேந்தமங்கலக் கோட்டையின் ஒரு தோற்றம்.

இது, கோட்டை வெளிப்புற மதிலின் வடமேற்கு மூலையின் தோற்றம் மதிலுக்குமேலே ஒத்த இடைவெளிகளுடன் தனித் தனிக் கட்டைகள் இருப்பதைக் காணலாம். நான்குபக்க

மதில்களின் மேலும் தொடர்ந்து இடைவெளிகளுடன் தனித்தனிக்


  1. *இந்திய சாசனங்கள் - தொகுதி 23 பக்கம்: 174, 182,