பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கெடிலக்கரை நாகரிகம்


மேலுள்ள படத்தில் அந்தக் கோயிலின் தோற்றத்தில் ஒரு பகுதியைக் காணலாம்.

படத்தில், கோயிலுக்குச் செல்லும் முகப்பு வாயிலில், ‘திருநாவுக்கரசு நாயனார் திருக்கோயில்’ என்னும் தொடர் பொறிக்கப்பட்ட வளைவினைக் காணலாம். கோயிலின்


கருவறையில் திருநாவுக்கரசரின் அழகிய திருவுருவம் பொலிவுடன் திகழ்கிறது. திருநாவுக்கரசரின் திருமுன் (சந்நிதி) கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலின் வாயில் வடக்கு நோக்கியுள்ளது.

திருநாவுக்கரசர் பிறந்த திருமனையின் பெருமையை அறிவிக்கும் அறிகுறியாகவும், அவர் பிறந்த மனை இதுதான் என்பதை நிலைநாட்டும் தெய்வச் சான்றாகவும், திருநாவுக்கரசர் திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் களரிவாகை என்னும் ஒருவகை மரம் காணப்படுகிறது. அந்த மரத்தின் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம்:

களரிவாகை என்னும் பெயருடைய அம்மரம், ஐந்நூறு அறுநூறு ஆண்டுகளாக அந்த இடத்தில் இருப்பதாகத் திருவாமூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் கேட்டால், அம் மரத்தின் வயது என்ன - எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அம் மரம் தோன்றியது என்று எவரும் திட்டவட்டமாகக் கூறமுடியாதபடி மிகப் பழங்காலந்தொட்டு அம்மரம் இருந்துவருவதாக, வாழையடி வாழையாகப் பெரியவர்கள் சொல்லி வருவதாகச் சிலர் கூறுகின்றனர். மரம் நன்கு தழைத்து