பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

221


போதகாசிரியர் ” என இவர் நூலின் முகப்பில் குறிப்பிடப் பட்டுள்ளார். புலவர் பெருமக்கள் பலர் இவரைப் பல பாடல்களால் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். இவர் திருவதிகை மான்மியம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். இவர் கரையேற விட்ட நகர்ப் புராணத்தை 1892 ஆம் ஆண்டில் இயற்ற, வண்டிப்பாளையம் இராசப்ப முதலியார் 1896 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

நூல்

இந்நூலில் திருநாட்டுப் படலம் முதல் அன்பர் போற்றிசைப்படலம் ஈறாக ஒன்பது படலங்கள் உள்ளன. பாயிரம் உட்பட மொத்தச் செய்யுட்கள் 333 ஆகும். இந்நூலிற் கூறப்பட்டுள்ள சில செய்திகளாவன:

“கெடிலம் தென்கங்கை எனப்படும். இந்த ஆறு வண்டிப் பாளையத்தை ஒட்டி முன்பு ஓடியது. ஆற்றின் வடகரையில் வண்டிப்பாளையம் இருந்தது. இங்கே அப்பர் கரையேறினார். இவ்வூர் இறைவன் பெயர் திருக்காட்சிநாதர்; இறைவி பெயர் தெரிசனாம்பிகை. இவ்வூருக்கு வண்டு நகர், வண்டுபுரம், சித்திபுரம் என்னும் பெயர்களும் உண்டு. இவ்வூர் அமைந்துள்ள திருமுனைப்பாடி நாட்டிற்கு ‘நடுநாடு’ என்னும் பெயரும் உண்டு. சான்றோர் உடைத்தான தொண்டை நாட்டிற்கும் சோறுடைத்தான சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதாலும், சான்றோரையும் சோற்று வளத்தையும் ஒரு சேரக் கொண்டிருத்தலாலும் இந்நாடு நடுநாடு எனப்பட்டது. தேவார ஆசிரியர் மூவருள் இருவர் பிறந்தது நடுநாடு; பாரிமகளிரை ஒளவையார் தெய்வீக மன்னனுக்குத் திருக்கோவலூரில் மணமுடித்த நாடு நடுநாடு; சீராமன் வழிபட்ட நாடு நடுநாடு.

இவ்வாறு பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஊருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் மாணிக்கவாசகருக்காகக் கடவுளால் திசை மாற்றப்பட்டு வடக்கே ஒடுவதாக இப் புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. ஊர் இப்போது கெடிலத்திற்குத் தெற்கே உள்ளது; முன்பு வடக்கேயிருந்தது. 1892 இல் சிவசிதம்பர முதலியார் இந்நூலை எழுதினும், ஊர் ஆற்றுக்கு வடக்கே யிருப்பதாகவே எழுதியுள்ளார். படிப்பவர்களைப் பழைய காலத்துக்கு அழைத்துச் சென்று வரலாறு கூறுவது போல் இருப்பதால் பழைய காலத்தில் இருந்தவாறே ஆசிரியர் பாடவேண்டியதாயிற்று. இதனைச் சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள,

“வாய்ந்த தொல் கெடி லத்தின் வடகரை

ஏய்ந்த சீர்க்கரை யேற்றும் பதி...