பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

263


கிளையில் துறைமுகம் இருப்பதையும் ஈண்டு நினைவு கூர்ந்தால், இந்தப் புதிய பாலத்தின் இன்றியமையாமை புலப்படும்.

கெடிலம் ஆறு கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூரில் தோன்றும் இடத்திலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் இடையிடையே ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளுள் இறுதிப்பாதை கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாதைதான் - இறுதிப் பாலம் கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாலம்தான்.

ஆற்றின் தோற்றம் தொடங்கி முடிவுவரை இடையிடையே ஐந்து அணைகள் உள்ளமை போலவே ஐந்து பாலங்கள் உள்ளன. அணைகளைப்போலவே பாலங்களும், திருக் கோவலூர் வட்டத்தில் இரண்டும் கடலூர் வட்டத்தில் மூன்றுமாக அமைந்துள்ளன.

மாநில நெடுஞ்சாலை

கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்திலும் கடலூர் வட்டத்திலும் உள்ள இன்றியமையாப் பாதைகளுள் பெரும்பாலன இதுவரை கூறப்பட்டுள்ளன. பெருநாட்டு நெடுஞ்சாலைக்கு (National Highways) அடுத்த படியான இன்றியமையாமையுடைய ஒரே ஒரு பாதைதான் இன்னும் கூறப்படவில்லை. அதுதான் மாநில நெடுஞ்சாலை (State Highways) யாகும். இது கடலூர் - மஞ்சக் குப்பத்தில் புறப்பட்டுத் திருக்கோவலூர்ப் பக்கமாகச் செல்கிறது. இதையொட்டி மாவட்ட நெடும்பாதை ஒன்றும் செல்கிறது. அது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநில நெடுஞ்சாலை எங்கும் கெடிலத்தைக் குறுக்கிட்டுக் கடக்காததால் இதுவரை இங்கே குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த மாநில நெடுஞ்சாலை கெடிலக்கரைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்; ஏனெனில் கடலூரில் புறப்படும் இந்த நெடுஞ்சாலை, கடலூரிலிருந்து திருக் கோவலூர்ப் பக்கம் வரைக்கும் ஏறக்குறையக் கெடிலக் கரையை ஒட்டியே எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பலமுனைப் பயன் நோக்கி இந்த மாநில நெடுஞ்சாலை கெடில நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

பேருந்து வண்டி போக்குவரவு

மேற்கூறிய பாதைகளுள் பெரும்பாலனவற்றில் பேருந்து வண்டி (பஸ்) போக்குவரவு நடைபெறுகிறது. மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரிலிருந்து எல்லாப் பக்கங்கட்கும் போக்கு வரவு நடைபெறுகிறது. புதுச்சேரி காரைக்கால் பேருந்து