பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழில்-வாணிகம்

279


துணிகளை வாங்கி வெளியூர்கட்கு அனுப்புவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இப்பகுதியில் உண்டாக்கப்படும் கைலி வகைகள் வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு வெளிநாட்டுச் செலாவணியை நம் நாட்டுக்குத் தேடித்தருகின்றன. இந்த வகையில் கைலி நெசவு நாட்டுக்குப் பெருந்தொண்டு புரிகிறதென்று சொல்லலாம். கடலூர், குறிஞ்சிப்பாடி, சென்னப்ப நாய்க்கன் பாளையம் முதலிய இடங்களில் பெரிய கைலி வணிக நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கட்கு நம் நாட்டில் சென்னையிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஏடன் முதலிய நாடுகளிலும் கிளைநிலையங்கள் உள்ளன. கெடில நாட்டுக் கைலிகள், சிலோன், பெனாங்கு, மலேயா, சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, சாவா, சுமத்ரா, தாய்லாந்து, பர்மா, இந்தோ சைனா, ஹாங்காங், சப்பான், ஏடன், மோரிஸ், அமெரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன - செய்யப்படுகின்றன. இப்போது இப் பகுதியிலிருந்து கைலிகள் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ என்னும் பெயரில் சென்னை வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அமெரிக்க டாலரைப் பெற்றுத் தருகின்றன.

கைலி வாணிகம் புரியும் வணிக நிலையங்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நடைபெறுகின்றன. அரை கோடி, முக்கால் கோடி, ஒரு கோடி ரூபாய் முதலீடுகளில் நடைபெறும் நிலையங்களும் உள எனலாம். இப்போது, பல்வேறு இடங்களிலும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றி நெசவாளர்க்கும் நெசவுத்தொழிற்கும் நன்மை புரிந்து வருகின்றன.

இந்தப் பகுதிக் கைலிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக அயல்நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில ஆண்டுகட்கு முன்வரையும் கெடிலக்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடைபெற்று வந்தது.

நெசவைச் சார்ந்து, நூலுக்கும் துணிகளுக்கும் சாயம் போடும் தொழில் பலவிடங்களில் விரிவாக நடைறெகிறது. துணிகளுக்கு அச்சுக் குத்தும் தொழிலும் சில விடங்களில் ஒரளவு நடைபெறுகிறது. இது முன்பு விரிவாக நடைபெற்றதுண்டு.

பல்வேறு கைத்தொழில்கள்

துணி நெசவேயன்றி, கோரைப்பாய், ஈச்சம்பாய், பனையோலைப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், செங்கற்