பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

307


அந்தத் திருப்புமுனையில் 20 அடி உயரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. அம்மேட்டின் உச்சியில் ஒரு பிள்ளையார் (கருங்கல் சிலை) அமர்ந்திருக்கிறார்; அவர் ‘உச்சிப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். முனை திரும்பி உச்சிப் பிள்ளையாரைக் கண்டு வணங்கிக் கடந்ததும் (அவரை வணங்காவிடின் என்ன செய்வாரோ? தம்மை வணங்கிச் செல்லாததற்காக தந்தை சிவனது தேரின் அச்சையே முறித்துவிட்டவராயிற்றே!), மிக அண்மையிலேயே கோட்டையையும் கோயிலையும் பார்க்கலாம். இவை இப்போது இடிந்து மிகவும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. கோட்டைக் கோயிலின் பாழடைந்த உட்புறத் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம்.

சேந்தமங்கலம் கோயில், வடக்கு நோக்கிக் கெடிலம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம், முதல் பெருவாயிலைத் தாண்டி உள்ளே சென்று அவ்வாயிலின் அருகில் நின்று எடுத்ததாகும். இந்தப் படத்தின் நடுவில் தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அந்த இடம் கோயிலின் இரண்டாவது வாயிலாகும். எனவே இந்தப் படத்தில் தெரிவது, கோயிலின் முதல் வாயிலுக்கும் இரண்டாவது வாயிலுக்கும் இடையேயுள்ள வடக்குச் சுற்றின் (வடக்குச் சுற்றுப் பிரகாரத்தின்) தோற்றம் என்பது புலனாகும். எழில் மிக்க பெருமாடம் ஒன்று தன் நுண்ணிய சிற்பங்களுடன் இவ்வாறு இடிந்து அழிந்து கிடப்பதைக் காணுங்கால் கண்களில் நீர் கலங்குகிறது. நமது வலக்கைப் புறமாக நூற்றுக்கால் மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளடங்கியிருக்கிறது; இடக்கைப் புற மூலையில் ஒரு கிணறு உள்ளது; அதில் தண்ணிர் தரை மட்டத்திற்கு - மேலே இருக்கிறது; கயிறு தேவைப்படாமல் கையாலேயே தண்ணிர் மொள்ளலாம் (நாங்கள் பார்த்தது மார்கழி - சனவரித்திங்களில்). இந்தக் கோட்டைக் கோயிலின் முழுத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.

இந்தப் படம், கோட்டைக் கோயிலின் தென்கிழக்கு மூலையில் இடிபாடுகட்கிடையே அரிதின் முயன்று கோட்டைச் சுவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு, கூடிய வரையும் கோயில் உட்பரப்பின் முழுத் தோற்றமும் தெரியும்படி எடுத்ததாகும். இப் படத்தின் நடுவில் உயரமாகக் கோபுரம்போல் தெரிவது கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலேயுள்ள விமானத் துரபியாகும். கருவறையைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் கால்கள் கலகலத்துச் சிதைந்த நிலையில் நின்ற கொண்டிருப்பதைக் காணலாம். கோயில் முழுதும் கருங்கல் வேலையே. சிற்ப