பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

333


தூணும் அடிப்பாகத்தில் 6 அடி சதுரம் கொண்டது. உயரமோ 34 அடி. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், அத்தனை தூண்களும் ஒற்றைக்கல் தூண்களே. தூண்களின் உச்சியில் கருங்கல் உத்தரங்கள் போடப்பட்டுள்ளன; அவற்றின்மேல் கருங்கல் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபம் முழுவதுமே சிற்ப வேலைப்பாடு மிக்கிருப்பினும், மண்டபத்தின் நான்கு நடுத்துரண்களும் மிகமிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடு களுடன் மிளிர்கின்றன. தென்னார்க்காடு மாவட்டத்திற் குள்ளேயே மிகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மண்டபம் இதுதான். இந்த மண்டபமும் முடிவு பெறாத நிலையிலேயே உள்ளது. இருப்பதும் இப்போது அழிந்து கொண்டு வருகிறது. ஆனால், இதன் உச்சி ‘கோணவியல்’ ஆராய்ச்சி நிலையமாகப் (Trigonametrical Station) Lucăru()āpg|.

இந்த இரண்டு மண்டபங்களும் கட்டி முடிக்கப் பெறாத நிலையில் அரைகுறைத் தோற்றத்துடன் இருப்பதற்குக் காரணம், கட்டிக்கொண்டிருந்தபோது போர் ஏற்பட்டமையா யிருக்கலாம். இந்த மண்டபங்கள் இரண்டும் வேங்கடம்மா என்னும் அம்மையாரால் கட்டப்பட்டன என ஊரார் உரைக்கின்றனர். இந்த அம்மையாரால் மண்டபம் கட்டப்பட்ட பின் ஊர் வேங்கடம்மா பேட்டை என அழைக்கப்பட்ட தாகவும், பின்னர் அப்பெயர் சுருங்கி வேங்கடம் பேட்டை என்றாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறந்த நாட்குறிப்பு ஆசிரியர் (Diaryist) ஆகிய புதுவை ஆனந்தரங்கப் பிள்ளை தமது நாட் குறிப்பில் இவ்வூரை ‘வேங்கடம்மாள் பேட்டை’ என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த வேங்கடம்மா என்பவர், செஞ்சியையாண்ட மன்னர் ஒருவரின் உடன் பிறந்தவராவார்.

[1]வரலாற்றுக் குறிப்பு ஒன்று, வேங்கடம் பேட்டை என்னும் பெயர்க் காரணத்தோடு தொடர்பு படுத்திப் பின்வருமாறு ஒரு செய்தி தெரிவிக்கிறது:- வேங்கடபதி என்னும் தலைவர் ஒருவர் வேங்கடம் பேட்டையில் இருந்து கொண்டு 1478இல் செஞ்சிநாட்டின் மேல் ஆட்சி செலுத்தியதாகவும், அவர் சுற்று வட்டாரத்தில் இருந்த சமணர்களைக் கொடுமைப்படுத்திய தாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது. வேங்கடபதி என்னும் இவர் பெயராலும் வேங்கடம் பேட்டை என்னும் ஊர்ப் பெயர் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கொள்கை.

வேங்கடம் பேட்டையில் வேங்கடம்மா கட்டிய மண்டபங்களைப் போலவே ஒரு பெரிய கருங்கல்லும்


  1. Mackenzie Manuscripts.