பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

கெடிலக்கரை நாகரிகம்


இருக்கும் இடம் தெரியவில்லை; சமணர்கள் ஏழாயிரவரே உள்ளனர்; ஆனால் இசுலாமியத்தில் 90,000 மக்களும் கிறித்தவத்தில் 65,000 மக்களும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? பெளத்தமும் சமணமும் சைவ நாயன்மார்களாலும் வைணவ ஆழ்வார்களாலும் மற்ற சைவ வைணவப் பெருமக்களாலும் முறியடிக்கப்பட்டன; இந்தச் சூழ்நிலையில் தமிழ் மன்னர்களும் அம்மதங்களை ஆதரிக்காது விட்டனர். ஆனால், இசுலாமும் கிறித்தவமும் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த பிற மன்னர்களின் ஆட்சியின் துணை கொண்டு புகுந்ததால், இப்பகுதியில் நன்கு வேரூன்றி ஆணியடித்துக்கொண்டன. அந்த அயல் ஆட்சியாளர்கள் தத்தம் ஆட்சிக் காலங்களில் தத்தம் மதங்களை நன்கு எருவும் நீரம் இட்டு ஆதரித்து வளர்த்தனர்.

இசுலாமியருள் பெரும்பாலானவர் வடக்கேயிருந்து வந்த மரபினர்; சிறுபான்மையினர் இசுலாமியராக மாறிய தமிழர்கள். ஏறத்தாழக் கிறித்தவர் எல்லாருமே மத மாறிய தமிழர்களே. வெளிக் கிறித்துவர் ஒரு சிலர் இருக்காம்.

இந்நாட்டில் பெரும்பான்மை மக்களான இந்துக்களும் பல்வேறு வகையினராயுள்ளனர். சைவர், சைவத்திலேயே வீர சைவர், வைணவர், வைணவத்திலேயே வடகலையார் - தென்கலையார், சங்கரர் - இராமாநுசர் - மாத்துவாசாரியார் முதலியோரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், சிறு தெய்வங்களை வழிபடுவோர் முதலிய பல்வேறு வகையினர் இந்துக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் சிவன், பிள்ளையார், முருகன், தேவி, திருமால், திருமகள், கலைமகள், ஆஞ்சநேயர், மாரியம்மன், காளி, அங்காளியம்மன், துரோபதையம்மன், பிடாரி, அய்யனார், வீரர், மாடசாமி, மன்னார்சாமி, காத்தவராயன் முதலிய பல்வேறு பெயர்களையுடைய தெய்வங்களை வழிபடுகின்றனர். இத் தெய்வங்கட்குக் கூட்டாகவும் தனித்தனியாகவும் கோயில்கள் உள்ளன. சில தெய்வங்கள் சில இனத்தவர்களால் குலதெய்வங்களாகக் கொண்டு வழிபடப்படுகின்றன்; அந்த இனத்தவர் இருக்கும் ஊர்களில் அந்தத் தெய்வங்கட்குக் கட்டாயம் கோயில் இருக்கும். எடுத்துக்காட்டாக, செங்குந்த இனத்தவரின் குலதெய்வம் முருகன்; செங்குந்தர் இருக்கும் ஊர்களில் முருகன் கோயில் இருக்கும்.

இனங்கள் (சாதிகள்)

தமிழகத்தில் எங்கும் உள்ள இனங்கள் (சாதிகள்) இங்கும் உள்ளன. கெடில நாட்டில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ள