பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாறு கண்ட திசைமாற்றம்

51


கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு அளவு ஒடித் தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலில் கலந்து விடுகிறது.

கெடிலத்தின் இந்த நான்கு முனை வளைவுக்கு நடுவே, திருக்கோயில் பெருமையும் வரலாற்றுச் சிறப்புமுடைய திருப்பாதிரிப்புலியூர் நகரம் இருக்கிறது. இந்த நகரின் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் கெடிலம் ஒடுகிறது. தெற்குப் பக்கம்தான் ஆற்றுப் பகுதி இல்லை. கீழுள்ள கோட்டுப் படம் காண்க

முன்பக்கத்திலுள்ள படத்தில், கெடிலம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே தெற்கு - வடக்காக ஒடுவதையும் திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கே மேற்கு கிழக்காக ஒடுவதையும், அந்நகருக்குக் கிழக்கே வடக்கு - தெற்காக ஒடுவதையும் காணலாம். நகருக்குத் தெற்கேதான் ஒன்றும் இல்லை. ஆனால் முற்காலத்தில் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கேதான் கெடிலம் ஓடியதாம். அப்படியென்றால், அந்நகரின் மற்ற மூன்று திசைகளிலும் கெடிலம் ஒடியிருக்க முடியாது. அதாவது,

இப்படித்தான் அப்போது ஆற்றின் அமைப்பு இருந்திருக்க முடியும். முடியும் என்றென்ன இப்படித்தான் இருந்தது. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. வரலாற்றுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் ஒருபுறம் இருக்க, இன்னும் இப்பகுதிகட்கு நேரில் சென்று கூர்ந்து நோக்குவோர்க்கு உண்மை புலனாகாமற் போகாது. முதலில் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளைக் காண்போம்.

‘திருவதிகையில் சிவத்தொண்டு புரிந்து வந்த திலகவதியம்மையாரின் தம்பி திருநாவுக்கரசர் பாடலிபுத்திரம் என்னும் ஊர் சென்று சமண சமயத்தில் சேர்ந்தார்; இடையிலே சூலைநோய் ஏற்பட, திருவதிகை போந்து மீண்டும் சைவ