பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

81


ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப் பள்ளம், நீர்ச் சுழல், நிரம்பா நெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப் பள்ளம் முதலிய[1] பொருள்கள் கூறப்பட்டுள்ளன. எனவே, ‘deep gulf’ என்பதைக் கொண்டு, கெடிலம் என்பதற்கு ‘ஆழமான நீரோட்டம்’ என்று பொருள் கொள்ளலாம்.

கெடிலம் என்னும் சொல்லுக்கு, [2]சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பின்வருமாறு பொருள் கூறியுள்ளது:-

கெடிலம் 1. Ketilam, n. cf. Garuda. 1. A river ncar Cuddalore; கடலூரை யடுத்துச் செல்லும் ஒரு நதி. நிரம்பு கெடிலப் புனலுமுடையார் (தேவா, 949, 1). 2. Deep stream; ஆழமான ஓடை . (W.)

கெடிலம் 2, Ketilam, N. cf. Kalila. 1. Den; கெபி. 2. Narrow passage; ஒடுங்கிய பாதை (W.)

இதன்படி நோக்குங்கால், கெடிலம் என்னும் சொல்லுக்கு, ஆழமான ஓடை, கெபி (பள்ளம்), ஒடுங்கிய பாதை என்னும் பொருள்கள் கிடைக்கின்றன. இந்தப் பொருள்கள், வின்சுலோ என்னும் ஆங்கில அறிஞரால் 1862 இல் உருவாக்கப்பெற்ற ‘வின்சுலோ தமிழ் - ஆங்கில அகராதி’ (M. Winslow, A Comprehensive Tamil and English Dictionary.) 67 GOLD அகராதியிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். வின்சுலோ அகராதியிலுள்ள பகுதி அப்படியே வருமாறு:-

“கெடிலம், S. The name of a river near Cuddalore, ஓர் நதி. 2. A byss, a deep gulf, ஆழமான ஓடை, 3. A den, கெபி. 4. A narrow passage, ஒடுங்கிய பாதை.”

வின்சுலோ அவர்களின் கருத்துப்படி., கெடிலம், மற்ற ஆறுகளுக்கு இல்லாத ஆழமோ பள்ளமோ, ஒடுங்கிய பாதையோ உடையதாகத் தோன்றவில்லை. ‘கெடிலம் ஓர் ஆறு என்னும் பொருள் வரையிலும் சரி. கெடிலம், காவிரி போன்ற ஆறுகளை நோக்க ஆழத்தில் மிகவும் குறைந்தது. வெள்ள நாட்கள் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவிற்குமேல் தண்ணீர் இல்லையென்று கூடச்


  1. சென்னைப் பல்கலைக் கழகம்: ஆங்கிலம் தமிழ்ச் சொற் களஞ்சியம் - 2 ஆம் தொகுதி - பக்கம் 463.
  2. சென்னைப் பல்கலைக் கழகம் : தமிழ் லெக்சிகன் - 2 ஆம் தொகுதி - பக்கம் 1085. கெ .6.