பக்கம்:கெடில வளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடிலவளம் 34 'திரைக் கெடில வீரட்டா னத்திருந்த.' (69) "பூவலர் சோலே மணமடி புல்லப் பொருண் மொழியின் காவலர் செல்வத் திருக்கெடி லத்தைக் கடந்தனேந்தார்' ( 136) கெடிலத்தின் நீர்வளத்தையும் அது பொன்னும் மணியும் பொரு கரியின் மருப்பும் மின்னும் வெண்முத்தும் மனம் நாறும் மலர்களும் மரத்துண்டங்களும் உந்தி உருட்டி வருவதையும் பாடி ஆவல் தீர்வதில் சேக்கிழாரும் பின்தங்கவில்லை. திருக் கெடிலம் எனக் கூறி அதன் தெய்வ மங்கலத்தைப் போற்றி புள்ளார். சேக்கிழார்க்குக் கெடிலம் திருக்கெடிலம் மட்டுமன்றுஅது செல்வக் கெடிலமாம்-காவல் கெடிலமாம்-காவல் செல்வத் திருக்கெடிலமாம்-இத்து ைஅரும் பெரும் பொருள் காவல் செல்வத்திருக் கெடில்ம்' என்னும் தொடரில் பொதிந்து செறிந்! திருப்பதைக் கண்டு மகிழலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பர் பெருமானின் கருத்தை அடியொற்றி, தென் திசையில் கங்கையெனும் திருக்கெடிலம் எனக் கெடிலத்தைக் கங்கையோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து பெருமை செய்துள்ளார் சேக்கிழார் பெருமான். அருணகிரிநாதர் திருப்புகழ் அருணகிரிநாதர் தமது முதல் திருவதிகைத் திருப்புகழின் சற்றில் பின்வருமாறு கெடிலத்தின் வளப்பெருக்கைப் புனைந்து, புகழ்ந்துள்ளார் : 'திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலேசிதறிச் செறியும் வயற் கதிரலேயக் கிரைமோதித் திமிதிமெனப் பறையறையப் பெருகுபுன ற் கெடிலகதித் திருவதிகைப் பதிமுருகப் பெருமாளே.' இப் பாடற் பகுதியால் கெடிலக்கரையின் சோலவளங்; களும் வயல்வளங்களும் தெரியவருகின்றன. H பெருக்கெடுத்து ஓடிவருகிறதாம்; அப்போது உழவர்கள் Aತ್ಲಿ திம்' திமிதிம்' எனப் பறை கொட்டி முழக்குகிருர்களாம்சி இலக்கியத்தில் கெடிலம் 35 என்ன அழகு! என்ன வியப்பு! கோடை கழியக், கொண்டல் பொழிய ஆற்றில் புதுப்புனல் பெருக்கெடுத்தோடி வரும்போது உழவர்கள் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்துப் பறைமுழக்கிப் பூசனை புரிந்து 'புதுப்புனல் விழா நிகழ்த் துவது பண்டைய மரபு. அதனைத்தான் இப் பாடலில் அருணை கிரியார் அறிவித்துள் ளார். புதுப்புனல் பெருக்கெடுத்து ஓடிவரும் மிடுக்கை அப்படியே சொல்லோவியப்படுத்திக் காட்டியுள்ளார் திருப்புகழார். மிடுக்கிற்கேற்ற சந்தம் பாடலில் அமைச்கப்பட்டுள்ளது. இப் பாட லை உரிய சந்தத்துடன் திரும்பத் திரும்பப் பாடுவோமாயின், புதுவெள்ளம் உண்மையிலேயே கமுகின் தலையை இடறுவது போலவும், வாழைக்குலேயைச் சிதறுவது போலவும், கதிரை அகலப்பது போலவும், திரை மோது வது போலவும், திமிதிம்’ எனப் பறை முழக்குவது போல ;ைம் உணர்ந்து வியந்து LCశ5” வெழுச்சி (Emotion) கொள்வோம். - திருப்பாதிரிப்புலியூர் ப் புராணம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் தாம் இயற்றிய திருப் பாதிரிப்புலியூர்ப் புராணத்தில் பல இடங்களில் கெடிலத்தைக் குறிப்பிட்டுள்ளார்; சில வருமாறு : தலவி சிட்டச் சருக்கம்: 'துங்க வாவியே யயித்திரம் கெடிலமேம் சொல்லும்.' பாடலேச்சுரர் சித்தராய் விளையாடிய சருக்கம் : - "சங்களைக் திருமங்களு மகில்களுஞ் சாளச் சக்தரத் துருமங்களுக் தொகிலவில் பல்வளனுஞ் சிக் தரத் துருக்கேசரி வயப்புலித் திரளுங் கொந்து கொந்ததாய்க் கெடிலமா கதிகொணர் தருமால்.” (33)

  • செரி முத்தமுங் கயமருப் பற்புத மணியும்

வாரி மிக்கெ முங் கெடில மா நதியள்ளி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/23&oldid=810694" இலிருந்து மீள்விக்கப்பட்டது