பக்கம்:கெடில வளம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ க டி ல வ ள ம் 1. ஆறுகளின் தோற்றமும் அமைப்பும் மலைப்பகுதியில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருகுவ. தாலும், கீழிருந்து ஊற்றுநீர் மேலெழுவதாலும், பெருமழை பெய்வதாலும் ஆங்காங்கே ஆறுகள் தோற்றம் எடுத்து, சூழ் நிலைக்கு ஏற்ருற்போல் சிறியனவும் பெரியனவுமாகிக் கடலை நோக்கி ஓடுகின்றன. பெரும்பாலும் ஆங்காங்கே பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஆறுகளின் அகலமும் நீளமும் அமையும். அடுத்த படியாகத், தம் மொடு வந்து கலக்கும் அருவிகள், கால்வாய்கள். ஓடைகள், துணையாறுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும் உருவத்தையும் பொறுத்து ஆறுகளின் அகல நீளங்கள் அமைவதுண்டு. ஓரிடத்திலிருந்து கடலை நோக்கிச் செல்லச் செல்லத் தசை சரிவா யிருக்கும். அதேைலயே கடலே நோக்கி ஆறுகள் ஒடு கின்றன. 'பள்ளத்தைக் கண்ட வெள்ளம் போல...' என்பது. பழமொழியன் ருே? எனவே, கடலுக்கு அண்மையில் தோன்றும் ஆறுகள் நீளத்தில் குறைவாயிருப்பதும், கடலுக்கு மேலே, வெகு தொலைவில் தோன்றும் ஆறுகள் நீளமாயிருப்பதும் இயல்பு. ஐக்கிய அமெரிக்காவில் ஒடும் மிசிசிப்பி' என்னும் ஆறு 4240 கல் நீளம் உள்ளது. உலகிலேயே மிகவும் நீள மான ஆறு இதுதான். இந்தியாவில் தமிழ்நாட்டில் திருநெல் வேலி மாவட்டத்தில் ஒடும் பொருநை என அழைக்கப்படும் -

  • 1 கல் என்பதை 16 கிலோ மீட்டர் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/6&oldid=810781" இலிருந்து மீள்விக்கப்பட்டது