பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வாணிகம் நிலவழியிலும், நீர் வழியிலும் நடைபெற்று வந்தது. கி. பி. பதினைந்தாம் நூற்uqண்டில் துருக்கி நாடு பெரிய வல்லரசாக மாறியவுடன் இவ்வாணிகம் தடைப்பட்டது. எனவே மேற்கு ஐரோப்பிய நாட்டினர் ஆசிய நாடுகளுக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்க விரும்பினர். இச்சமயத்தில் உ ல க ம் உருண்டையானது எ ன் னு ம் கொள்கையை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

 கிறிஸ்தோபர் கொலம்பசு என்ற ஒரு மாலுமி ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லாவின் துணை கொண்டு, இந்தியா விற்குப் புதிய கடல்வழி கண்டறிவதற்காகப் புறப்பட்டார். ஆனால் தற்செயலாக அவர் மேற்கிந்தியத் தீவுகளைக் கண் டறியும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருக்குப் பின் அமெரிக்கோ வெஸ்புக்கி என்ற இத்தாலியர் புத்துலகமான அமெரிக்கக் கண்டத்தைக் கண்டறிந்தார். அமெரிக்கா வளம் மிக்க பெருநிலமாக இருப்பதைக் கண்ட ஐரோப்பியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இப்புத்துலகத்திற்குச் சென்றனர்; அங்குக் கிடைத்த பொன்னையும், வெள்ளியையும் கப்பல் கப்பலாக வாரிக்கொண்டு வந்து தங்கள் நாட்டுக் கருவூலங் களில் கொட்டி நிரப்பினர். அமெரிக்கத் தங்கத்தில் பெரும் பகுதியை வாரிக் கொண்டு வந்தவர்கள் ஸ்பானியர்களே. அவர்களுக்குப்பின் பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர் களும், போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் இக்கொள்ளை யில் பெரும் பங்கு கொண்டனர்.
 கி. பி. பதினேழாம் நூ ற் றா ண் டி ல் ஏற்பட்ட பல அரசியல், சமயக் குழப்பங்களின் காரணமாக ஆங்கிலேயர் களும், பிரெஞ்சுக்காரர்களும், ஸ்பானியர்களும் கூட்டங் கூட்டமாக அமெரிக்காவில் குடியேறத் தொடங்கினர். பிறகு மற்ற ஐரோப்பிய நாட்டினரும் குடியேறத் தொடங்கினர். பல குடியேற்ற அரசாங்கங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் குடியேற்ற நாடுகள் (Colonies) என்னும் பெயர் பெற்றன. இக்குடியேற்ற நாடுகள் நாளடைவில் உரிமை பெற்றுத் தன்னாட்சி நாடுகளாக மாறின. இத்தன்னாட்சி