பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5


நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பே ஐக்கிய நாடு என்னும் பெயர் பெற்று விளங்குகின்றது.

 அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல மொழியாளர்களும் இனத்தார்களும் ஒன்றுகூடி வாழும் நிலை ஏற்பட்டது. பல நாட்டுப் பண்பாடும், கலாசாரங்களும் கூடிக் கலப்புற்றன. புத்துணர்ச்சியோடு கூடிய ஒரு புதிய தலைமுறை ஏற்பட்டது. இத்தலைமுறையே அமெரிக்கத் தலைமுறையாகும். இராச புத்திரர்களைப் போல இவ்வமெரிக்க மக்களும் எழுச்சிமிக்க இனத்தவராக விளங்குகின்றனர். அமெரிக்க நாட்டின் எல்லையற்ற வளம், இம்மக்களின் குன்றாத உ  ழைப்பை ப் பெற்று வளர்ந்தது. உலகில் அமெரிக்க நாடு இன்று செல்வச் சிறப்புள்ள நாடாக விளங்குகிறது; உலக அரசியல் அரங்கில் முதலிடம் பெற்று வல்லரசாகவும் மாறிவிட்டது. இன்று பன்னாடுகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் ஆற்றலை அமெரிக்க நாடு பெற்று விளங்குகிறது. அமெரிக்க நாடு வல்லரசாக மாறியதற்கும், செல்வச் சிறப்புப் பெற்றதற்கும் கென்னடியின் குடும்பமும் தன்னாலியன்ற பணியைச் செய்து வந்திருக்கிறது. கென்னடியின் முன்னோர்கள் அயர்லாந்தி லிருந்து குடியேறிய கத்தோலிக்கர்கள்.
 கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்து பெரும்பாலும் உழவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வந்தது. உருளைக்கிழங்கு பயிரிடும் தொழிலே அயர்லாந்து மக்களின் முக்கியமான தொழில். கி பி 1840 ஆம் ஆண்டிலிருந்தே இப்பயிர்த் தொழிலுக்குப் பெரும் கேடு சூழத் தொடங்கியது. வர வர விளைச்சல் குறைந்து கொண்டு வரத் தொடங்கியது. கிழங்கு க ள் நிலத்திற்குள்ளேயே அழுகத் தொடங்கின. நல்ல நிலையில் இருந்த கிழங்குகள் ஒரே இரவில் கூட அழுகி விடுமாம். உருளைக்கிழங்கு பயிரிடுவதைத் தவிர வேறு எத் தொழிலும் செய்தறியாத அவ்வேழை உ ழ வர் க ள் யாது

கெ-2