பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


பாஸ்டன் வட்டாரத்தில் யாங்கிக் கிறித்தவர்கள் பெருவாரியாக வாழ்ந்தனர். இவ்வட்டாரத்தின் ஆதிக்கம் இவர்கள் கையில் இருந்தது. இவர்கள் அயர்லாந்திலிருந்து வந்து குடியேறிய கத்தோலிக்கர்களை மிகவும் கேவலமாக மதித்தனர் ; வெறுத்தனர். அயர்லாந்து மக்களோடு எந்த விதச் சமூகத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூ டா து என்பதில் யாங்கிகள் பெரிதும் பி டி வா தம் காட்டினர். எனவே ஐரிஷ் மக்கள் தன்மானம் மிக்கவர்களாகவும், யாங்கிகளேயோ மற்ற இனத்தாரையோ உதவி க்கு எதிர் பாராமல் சுயேச்சை மனப்பான்மையோடு வாழ்பவர்களாக வும் மாறிவிட்டனர். சமூகப் பொருளாதாரத் தொடர்புகளை யெல்லாம் தங்கள் இனத்தாரோடு நிறுத்திக்கொண்டனர்.

 இளைஞர் பாட்ரிக் இவற்றைப்பற்றி யெல்லாம் அதிகம் சிந்திக்கவில்லை. சிந்திப்பதற்கும் அவருக்கு நேரமில்லை. வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதிலேயே அவர் முனைப்பாக இருந்தார். வாழ்க்கையோடு சலியாத போராட் டம் நடத்தினார். ஓரளவு அவர் வாழ்க்கைத்தரம் மேன்மை யுற்றது. ஓர் ஐரிஷ் பெண்ணைத் தி ரு மண ம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளுக்குத் தந்தையானார். நான் காவது குழந்தை பிறந்த சி ல நா ட் க ளி ல் பாட்ரிக் இறந்தார்.
 பாட்ரிக்கின் நான்காவது குழந்தைக்குத் தா யார் பாட்சிக் ஜெ. கென்னடி என்று பெயரிட்டார். அக்குழந்தை தான் ஜான் பிட் ஜெரால்டு கென்னடியின் தா த் தா. கென்னடியின் குடும்பம் உலகப் புகழ் பெறுவதற்கு வித் திட்டவர் இவரே. பாட்ரிக் ஜே. கென்னடியின் இளமை வாழ்க்கைத் துன்பத்திலேயே கழிந்தது. கணவனே இழந்த
 🞸 யாங்கிக் (Yankee) கிறித்தவர்கள் பிராடெஸ்டண்டுகள் நியூ இங்கிலாந்து மாநிலங்களில் பெருவாரியாக வாழும் அமெரிக்க மக்கள்.

கெ-3