பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. கென்னடியின் இளமை

    "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் "- என்பது வ ள் ளு வ ப் பெருமானின் அருள்வாக்கு. இத்திருக்குறட் கருத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கியவர் ஜோசப் கென்னடி. ஜான் பிட் ஜெரால்டு கென்னடி இன்று உலக ம க் க ள் உள்ளத்தில் அழியா இடம் பெற்றதற்கு அவருடைய தந்தையாகிய ஜோசப் கென் னடியே அடிப்படைக் காரணம் என்பது வெள்ளிடை மலை. தம் ம க னு க் கு ஜோசப் கென்னடி முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார். ஜானின் அரசியல் ஆசான் அவருடைய தந்தையே என்று கூறினால் மிகையாகாது.
    ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு அடிப் படையாக அமைபவை இரண்டு என்று உளநூல் வல்லுநர் கூறுவர். ஒன்று த லை மு  றை தலைமுறையாக வருவது (heredity) , மற்றொன்று சுற்றுச் சூழ்நிலை. ஜான் கென்னடிக் குத் தம் தந்தையின் மூலம் நல்ல தலைமுறை நிலை கிட்டியது. நல்ல சுற்றுச் சூழ்நிலையை ஜோசப் தம்முடைய மகனுக்கு அமைத்துக் கொடுத்தார். தந்தையும் மகனும் பல பண்பு களில் ஒற்றுமை காட்டினர்.
    ஜோசப் இளமையிலேயே சிறந்த உழைப்பாளர் , ஜானும் இளமையிலேயே சிறந்த உழைப்பாளர்.
    ஜோசப் சிறந்த எழுத்தாளர் ; அவர் எழுதிய நூல் அமெரிக்க மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. ஜானும் சிறந்த எழுத்தாளர் ; இவர் எழுதிய நூ ல் க ள் உலகப் புகழ் பெற்றன ; அமெரிக்காவில் மிக உயர்ந்த பரிசான புலிட்சர் பரிசையும் இவர் நூல் ஒன்று பெற்றது.