பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


சட்டசபை உறுப்பினர் ஆவதற்குரிய தகுதிகள் யாவும் அவரிடத்தில் நிறைந்து காணப்பட்டன. ஆனல் தமது அரசியற் பணிக்கு நிலைக்களமாக எவ்விடத்தைத் தேர்ந் தெடுப்பது என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. ஜான் எவ்விடத்திலும் நிலைத்து வாழ்ந்தவரல்லர் : தமது சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதற்கு அவருக்கு எதுவுமில்லை. குழந்தைப் பரு வத் தி ல் சிறிது நாள் பாஸ்டனில் வாழ்ந் திருக்கிருர் ; பிறகு நியூயார்க்கிலும், கனக்டிக்கட்டிலும் பள்ளி மாணவராக இருந்திருக்கிருர். அவருடைய கல்லூரி வாழ்க்கை ஹார்வார்டில் கழிந்தது. பிறகு கடற்படையில் பணி புரிந்தார். எப்பொழுதுமே அரசியல்வாதிகளுக்கு நெருங்கிப் பழகிய சொந்த இடம் ஒன்று இருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பு ஜானுக்கு இல்லாதது பெருங்குறையே. நீண்ட சிந்தனைக்குப் பிறகு தங்கள் முன்னேர்கள் வாழ்ந்த பாஸ்டன் பகுதியே அவருக்குச் சிறந்ததாகப் பட்டது. அத் தொகுதி மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் அடங்கியதாகும்.

புதிதாக அரசியலில் நுழைபவர்களுக்கு அப்பகுதி தகுந்ததன்று. எண்ணெய்க் கி ண று க ள் புகைவண்டித் தொடர்கள், குப்பை மேடுகள், புகை மண்டிய தொழிற் சாலைகள், பழமைச் சி ன் னங்க ளாக நிற்கும் செங்கற் குடிசைகள், சரக்குகள் ஏற்றியிருக்கும் கி ட ங் கு க ள் ஆகியவற்றுக்கிடையே ஐரிஷ் மக்கள், இத் தாலியர்கள் மற்றும் பல்நாட்டு வந்தேறிகள் நெருக்கியடித்துக்கொண்டு அ ப் பகு தி யி ல் வாழ்ந்து வந்தனர். கப்பற்றுரையிலும் கிடங்குகளிலும் பணிபுரிந்த கூலிக்காரர்களும், தொழிற் சாலைப் பொறியோட்டிகளும் அங்கு வாழ்ந்தனர். அமெரிக்கா வில் மிகுதியாகக் குற்றங்கள் நடைபெறும் இடங்களில் அதுவும் ஒன்ருக இருந்தது. அத்தொகுதியின் ஒரு மூலையில்

கெ-5