பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சட்டமன்ற உறுப்பினர்

கி. பி. 1947 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஜான், சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ருர். இனி நாமும் அவரை மதிப்புடன் கென்னடி என்று அழைப்போம். கென்னடி சட்டமன்றத்தில் நுழைந்தபோது எல்லாரும் அவரை ஏளனமாகப் பார்த்தனர் ; கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் பணத்தாலும், மேல்மட்டச் செல்வாக்காலும் உறுப்பினராகி வ ந் து வி ட் டார் என்று எண்ணினர். கென்னடி பாஸ்டன் நகரில் புகழ் மிக்கவராக இருக்கலாம். மிகவும் செல்வாக்கும் விளம்பர மும் பெற்ற அரசியற் குடும்பங்கள் மிகுந்திருந்த தலைநகரில் கென்னடி இலைமறை காய் போல் தெரிந்தும் .ெ த ரி யா ம லு ம் இருந்தார். கென்னடி சட்டமன்ற உறுப்பினர் ஆகியும்கூட, அவருடைய விளையாட்டுப் பண்பு போகவில்லை. சில நேரங்க ளில் அலுவலக வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு கால்பந்து விளையாட்டிற்கோ, அல்லது கழிப்பந்தாட்டத் திற்கோ சென்றுவிடுவார்.

கென்னடி சட்டமன்றத்தில் இடம் பெற்று சிறிது காலம் ஆனவுடன் பலதரப்பட்ட மக்கள் கென்னடியின் அலுவலகத்தைத் தேடிவரத் தொடங்கினர். அவருடைய அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகள் புத்துரு வமும் வளர்ச்சியும் அடையத் தொடங்கின. தொழிலாளர் ஊதியம், வேலை நிலைமை, சமூகப் பாதுகாப்பு, வீட்டு வசதி, விலைவாசிகள், வாடகைகள், முன்னுள் இராணுவ வீரர்கள் சலுகை, முதியோர் பாதுகாப்பு ஆ கி ய பல திட்டங்களைப் பற்றிக் கென்னடி தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர்.

கென்னடியின் அர சி ய ற் கொள்கை பலருக்குப் புரியாத புதிராக இருந்தது. அவர் முழுக்க முழுக்கக் கட்சி