பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38


நோக்கம் உடையவராக இல்லை. அவர் ஜ ன நா ய க க் கட்சியின் உறுப்பினர் என்பது உண்மைதான் ஆல்ை அவர் ஜனநாயகக் கட்சியின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனநாயகக் கட்சி ஒன்றுதான் அவருடைய கொள்கைகளே உருவாக்கியது என்று கூற முடியாது. நல்ல கருத்துக்களையும், திட்டங்களையும் கட்சி வேறுபாடின்றி அவர் ஆதரித்தார். தம்முடைய புயல்வேக முன்னேற்றங்களுக்கு ஒத்துவராத ஜனநாயகக் கட்சித் தலைமையைக் கூட அவர் பொருட் படுத்தவில்லே ஏன் ? ஒரு ச ட் ட ம ன் ற உறுப்பினருடைய முன்னேற்றத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல ஆற்றல் பெற்ற அமெரிக்கத் தலைவர் ட்ருமனைக் கூடச் சில சமயங்களில் அஞ்சாமையோடு எதிர்க்கத் துணிந்தார்.

"சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் வெறும் பு ழு க் க ளே ப் போல மதிக்கப்படுகிருர்கள். தேசியத் திட்டங்களில் எங்களே யாரும் பொருட் படுத்துவதில்லை. ஒர் அரசியல் ஆண்டையாருக்கு நான் பதில் சொல்ல வேண்டுமென்று எ ன க் கு கற்றுக் கொடுக்கவில்லை. அரசியலின் மேல்மட்டத்தில் உள்ள தலைவர்களைப் பகைத்துக் கொண்டே நான் எனது ஆக்க வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும். அமெரிக்கத் தலைவர் ட்ரூமனின் தயவு தேவை என்ற உணர்ச்சியே எனக்கு ஏற்படவில்லை” என்று அஞ்சாமையோடு முழங்கினர் கென்னடி.

கட்சி அரசியலுக்கும், அமெரிக்க அரசியலைப் பற்றிய சாதாரண விளக்கங்களுக்கும் கென்னடி அப்பாற்பட்டவர். ஹார்வார்டு கல்லூரியில் பயிலும்போது அவர் ஒரு கன்சர் வெட்டிவ் போலக் காணப்பட்டார். ஆனல் அரசியலில் நுழைந்ததும் அவருடைய கொள்கைகள் திருத்தம் பெற்று மெருகேறத் தொடங்கின. பொதுவுடைமை நாடுகளின் பால் அமெரிக்க அரசாங்கம் கடைப்பிடித்த எதிர்மறைக் கொள்கைகளை அவர் க ண் டி க் க த் தொடங்கினர் ;