பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


அமெரிக்கத் தலைவர் ட்ரூமனின் வெளிநாட்டுக் கொள்கை களில் புரையோடிப் போயி ரு ந் த குறைபாடுகளைக் கண்டித்தார். ஆல்ை பாராட்ட வேண்டிய கொள்கைகளைக் கென்னடி பாராட்டத் தவறியதில்லை.

கென்னடியினுடைய அரசியல் போக்கை நண்பர்கள் கூர்ந்து கவனித்தனர். ெக ன் ன டி உரிமை வேட்கை மிகுந்த சுதந்தர அரசியல்வாதியாக வளரத் தொடங்கினர்; நாட்டின் கவனத்தை ஈர்த்த பெரும்பாலான முக்கியக் கொள்கைகளை வி ரு ப் பு வெறுப்பில்லாமல் அணுகினர். கட்சி நலன் என்ற குறுகிய எ ல் லே யி ல் நில்லாமல், அமெரிக்க மக்கள் நலன் என்ற விரிந்த அளவில் கென்னடி யின் அரசியற் கொள்கைகள் விளங்கின. கென்னடியின் இப்போக்கு கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியைத் தரக் கூடியதாக இருந்தது. ஆல்ை கென்னடி இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

கென்னடி தமக்கென்று உயர்ந்த அரசியல் கொள்கை களே வகுத்துக் கொண் டு அவற்றைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். மக்களுக்குக் கென்னடியின் தலைமை யில் பற்றும் நம்பிக்கையும் தோன்றத் தொடங்கி விட்டன. மாசாசூசெட்ஸ் தொகுதியில் கென்னடியை எவரும் எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே கட்சித் தலைவர்கள் கென்னடியின் போக்கைத் தடுத்து நிறுத்தவோ, தலையிட்டுத் தொல்லை கொடுக்கவோ ஆற்றலின்றிச் செயலற்றவர்களானர்கள்.

இளைஞரான கென்னடி அரசியல் வானில் பேரொளி யோடு வலம் வருவதைக் கண்ட எதிர்க்கட்சிக்காரர்கள் இவருடைய சமயத்தை ஒரு காரணமாக எடுத்துக் கூறி, இவர் செல்வாக்கைக் குறைக்க விரும்பினர். எல்மர் ஈரோஜர்ஸ் என்ற உறுப்பினர் ஒருமுறை தாம் சட்டமன்றக் குழுவில்