பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


ஒரு நாள் கென்னடி பூங்காவில் தனிமையாக உலாவிக் கொண்டிருந்தார். திடீரென்று பூங்காவின் மூலையில் ஸ்வீட் அடிலைன் என்ற பா ட் டு தென்றலில் மிதந்து வந்தது. அப்பாட்டைக் கேட்டதும் கென்னடி அசைவற்று நின்றுவிட் டார் ; அப்பாட்டு வரும் திசையை நோக்கினர். இரு பாஸ் டன் நகரக் கிழவர்கள் அப்பாட்டைப் பாடிக்கொண்டிருந் தனர். கென்னடி காபட் லாட்ஜைத் தேர்தலில் தோற்கடித்து வெற்றி பெற்றதைப் பாராட்டும் நோக்கத்தோடு அப்பாடலை அக்கிழவர்கள் பாடினர். அப்பாடல் கென்னடியின் தாத்தா வான பிட் ஜெரால்டு கிழவருக்கு மிகவும் பிடித்தமான பாட்டு. அதைக் கேட்ட கென்னடியின் க ண் களி ல் ஆனந்தக் கண்ணி ர் பொங்கியது,

' உங்களுக்காக உழைப்பேன் ; உங்கள் நலனுக்காகப் பாடுபடுவேன் ’ என்று ஒர் உறுதி எடுத்துக்கொண்டார் கென்னடி.

கென்னடியின் அலுவலகத்தில் எந்நேரமும் கூட்டம் மிகுதியாக இருந்தது. அவரைக் கண்டு பேச மக்கள் அலே அலேயாக வந்து கொண்டிருந்தனர். கென்னடி எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்று, அவர்களுடைய குறைகளைப் பொறுமையுடன் கேட்டு வந்தார் ; அவர்களுடைய குறை களைப் போக்க அல்லும் பகலும் பாடுபட்டார்.

புது மனைவியான ஜாக்குலின் தனது கணவனுடைய வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தாள். எல்லா மனைவியருக்கும் இயல்பாக இருக்கும் பண்பு அவளிடமும் இருக்குமல்லவா ? மற்றப் பெண்டிரைப் போல ஜாக்குலினும் கணவனிடம் சலித்துக்கொண்டாள்.

  • ஜாக்குலின் ; நீ ஓர் அரசியல் வாதியின் மனைவி. அரசியல் வாதியின் மனைவியென்ருல் இப்படிப் பல தொல்இல களேச் சகித்துக்கொள்ளத் தான் வேண்டும். நான் உனக்கு மட்டும் சொந்தமானவன் அல்லன். இந்த நா ட் டு க் கே சொந்தமானவன் ’ என்று கென்னடி அடிக்கடி கூறுவது வழக்கம்.