பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


இரண்டாவது முறையாகச்செய்த அறுவை மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. இவ்வறுவையினல் கென் னடியின் சிந்தனை ஆற்றல் பாதிக்கப்படுமோ எள்று மருத்து வர்கள் அஞ்சினர். ஆனால் அவர்கள் அச்சம் பொய்யாகி விட்டது. அறுவை மருத்துவத்திற்குப் பிறகுதான் கென்னடி யின் சிந்தனை ஆற்றல் கூர்மை பெற்றது.

ஓய்வு பெறுவதற்காகக் .ெ க ன் ன டி பாம்பீச்சிற்குச் செல்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறினர். கென்னடி யும் தம் மனைவியோடு புறப்பட்டார். பாம்பீச்சின் தட்ப வெப்பம் கென்னடியின் உடல் நிலைக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. நீண்டநாள் தம் உள்ளத்தில் தேக்கி வைத் திருந்த எண்ணங்களுக்கு அவர் முழு உருவம் தந்து வெளிப் படுத்தினர், அவ்வெண்ணக் குவியல் தீரர்கள் வாழ்க்கை என்ற அரிய நூலாக மலர்ந்தது.

பாம்பீச்சில் தமது வீட்டின் கீழ்த்தளத்தில் படுக்கையில் படுத்த வண்ணமோ அல்லது வீட்டிற்கு முன்புள்ள குளத்தின் கரையில் அமர்ந்திருந்த வண்ணமோ கென்னடி எழுதிக் கொண்டிருந்தார். சில சமயங்களில் அவர் சொல்ல ஜாக்கு லின் எழுதுவதும் உண்டு. க ன ம | ன வெள்ளேத்தாளில் நிறைய இடைவெளி விட்டுக் கென்னடி எழுதினர். இத்தாள் கள் சிவப்பு அட்டைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சட்ட ம ன் ற நூலகத்திலிருந்த ஆய்வுப் பிரிவினர் கென்னடியின் தேவையை அறிந்து நிறைய நூல்களே அனுப்பிக் கொண்டிருந்தனர். வாஷிங்டனில் சோரன்சன் என்பார் இவருடைய இலக்கியப் பிரதிநிதியாக இருந்து நிகழ்ச்சிகளைப்பற்றிய விவரங்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றைப்பற்றி வரலாற்று வல்லுநர்களிடமும், நிபுணர் களிடமும், கலந்து பேசிக்கொண்டிருந்தார். ஆர்தர் கிராக் என்ற பழைய குடும்ப நண்பர் ஒருவரும், மற்றும்பல அறிஞர் களும் இவருக்கு அடிக்கடி ஆய்வுரைகள் அனுப்பிவந்தனர்.