பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


பதினறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து ஏன் தூங்கியது?’ என்ற பெயரில் கென்னடி ஒரு நூல் எழுதி வெளியிட்டாரல்லவா ? அந்நூலே ஹார்ப்பர் பிரதர்ஸ் என்ற பெரிய பதிப்பகத்தார் வெளியிட மறுத்துவிட்டனர். ஆனல் அதே பதிப்பத்தார் தீரர்கள் வாழ்க்கையை வெளியிடு வதற்கு வலிய வந்தனர். நூல் சிறப்பான முறையில் வெளி யிடப்பட்டது. இந்நூலேக் கென்னடி த ம து மனைவிக்குக் காணிக்கையாக்கினர். -

இந்நூல் புகழ்மிக்க அரசியல் வீரர்களைப் பற்றிய வரலாருகும். இதில் அரசியல் வீரம் என்ருல் என்ன என் பதைக் கென்னடி தெளிவாக விளக்கியிருந்தார், பொதுவாக அரசியலில் முன்னேற விரும்புவோர், தமது தொகுதி மக்களின் தேவைகளை உணர்ந்து திருப்தி செய்தல், தொகுதி யிலுள்ள மக்களுக்குக் கையூட்டு வழங்குதல், ஆசை காட்டல் முதலிய வழிகளைக் கடைபிடிக்க வே ண் டு ம் என்பது அமெரிக்க அரசியல் வாதிகளின் பொதுவான எண்ணம், இக்கொள்கையைக் கென்னடி மறுத்தார் ; சட்டமியற்றும் பாராளுமன்றத்தின் த ன் ைம ைய விளக்கினர் ; பாராளு மன்ற உறுப்பினர்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யுடன் ந - ந் து .ெ கா ஸ் ள வே ண் டு ம் என்பதை வற்புறுத்தினர்.

அரசியல் வீரத்திற்குத் தடையாக இருப்பது, ஓர் உறுப்பினர் மீ ண் டு ம் மீண்டும் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புவது தான் என்பதைக் கென்னடி விளக்கினர் ; குறிப்பிட்ட ஒரே கொள்கைக்காக மீண்டும் மீண்டும் போராடித் தோல்வியடையும் அரசியல் வாதிகள், மற்ற உயர்ந்த கொள்கைகளுக்காகப் போராடும் வாய்ப்பை இழக்கிருர்கள் என்பதைத் தெளிவுபடுத்தினர்.

ஓர் அரசியல்வாதி தாம் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி வாக்காளர்களால் பெரிதும் அவதிப்படும்நிலையை விளக்கினர். தொகுதியின் குறிப்பிட்ட சில நலன்களேயே பெரிதாகக்