பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


வெற்றியடைந்தார். இது மிகவும் பாராட்டுதற்குரிய வெற்றி யாகும். இம்முறை கென்னடி மேல்சபை உறுப்பினராகப் பதவி ஏற்றதும், மிகவும் உயர்ந்த பதவியான அமெரிக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் எ ன் று முடிவு செய்து கொண்டார். இப்பதவியை அமெரிக்காவில் எந்தக் கத்தோலிக்கரும் இதுவரை வகித்ததில்லை. சமயம் இதற்கு ஒரு பெருந்தடைக் க ல் லா க இருந்தது. இருந்தாலும் கென்னடி உள்ளம் தளரவில்லை

அமெரிக்கத் தலைவர் தேர்தல் நெருங்க நெருங்கக் கென்னடியின் பெயர் செய்தித் தாள்களில் அடிபடத் தொடங்கியது. •

பொதுமக்களின் எண்ணம் என்றும் பொய்ப்பதில்லை. கென்னடியை அமெரிக்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களில் பெரும்பகுதியினர் விருப்பப்படுகின்றனர் ஏன் ? கென்னடி இளைஞர் ; நாற்பத் திரண்டு வயதைக்கூடக் கடவாதவர் ; பரட்டத் தலையுடன் காட்சியளிக்கும் இவர் இ ன் று ம் கல்லூரி மாணவரைப் போலவே காட்சியளிக்கிருர்.

' கென்னடி சுறுசுறுப்பாண்வர்; அறிஞர்; உறுதியான பண்புடையவர் ; உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர் ; ஊக்கம் நிறைந்தவர் ; ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர் ’ என்று செய்தித் தாள்கள் .ெ க ன் ன டி ைய வருணிக்கத் தொடங்கிவிட்டனர். 1961 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் கென்னடி சிறப்பான வெற்றியடைந்தார். உலகிலேயே மிகச்சிறிய வயதில், மிகப் பெரிய பதவியை வகித்த முதல் மனிதர் ஜான் பிட்ஜெரால்டு கென்னடிதான்.

அன்று வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் பூண்டு விளங்கியது. தெருவெங்கும் நூருயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போக்குவரத்துக்குக்கூடத் தடை விதிக்கப் பட்டுவிட்டது. தமது இளந்தலைவரான கென்னடியைக் காண்