பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


பதற்கும், அவர் பேச்சைக் கேட்பதற்கும் கொட்டும் பணியை யும் பொருட்படுத்தாமல் மக்கள் கால் கடுக்க நின்றுகொண் டிருந்தனர். உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் எல்லா ரும் தொலைக்காட்சிக் கருவிகளின் முன்னும், வானெலியின் முன்னும் ஆவலோடு அமர்ந்திருந்தனர். உலக நாடுகளின் தலை விதியையே மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றி ஒரு வல்லரசின் ஆட்சித்தலைவர் என்ன பேசப்போகிருர் என்பதை அறிவிப்பதற்காகச் செய்தித் தாள்களின் நிருபர்கள் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தனர்.

கி. பி. 1961 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 20 ஆம் நாள், அமெரிக்க நாட்டின் முப்பத்தைந்தாவது தலைவராக ஜான் பிட் ஜெரால்டு கென்னடி பதவி ஏற்றர். அவர் அப் போது ஆற்றிய சொற்பொழிவு உலக வரலாற்றிலே ஒரு திருப்புமையம் என்று சொல்லலாம். இப்பேச்சைக் கொட்டும் அடைமழை என்று சொல்வதா ? இ னி க் கு ம் இலக்கியத் தேனுறு என்று சொல்வதா ? தங்கப் பேழையில் நிரப்பி வைத்த வைரக்கற்கள் என்று அவர் பேச்சைக் கூறலாம். அவர் பேச்சு உலக அரசியல் வாதிகளின் நெஞ்சத்தில் ஆழ மாகச் சென்றுதைத்தது. எதிரிகளின் அணிவகுப்பில் கூட ஒரு நெகிழ்ச்சியை அப்பேச்சு உண்டாக்கியது. அச்சொற் பொழிவின் சுருக்கம் பின் வருமாறு :

' உலகம் இன்று பெரும் அளவு மாறிவிட்டது. பல உருவங்களில் தோன்றி உலக மக்களை வ ருத்தும் பசிப் பிணியைப் போக்கும் ஆற்றலே மனிதன் பெற்றிருப்பதைப் போலவே. மக்களினத்தை அழித்தொழிக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கிருன். எந்தப் புரட்சிகரமான கொள்கைகளுக்காக நமது முன்னேர்கள் போராடினர்களோ, எந்தச் சி க் க ல் தளுக்குத் தீர்வு காண்பதற்காக நமது முன்னேர்கள் தமது ஆருயிரை நல்கினர்களோ, அக்கொள்கைகளும், சிக்கல் களும் இன்றும் முற்றிலும் தீர்வு காண முடியாத நிலையிலேயே இருக்கின்றன. மனிதனின் உ ரி ைம க ள் ஆண்டவனல் அளிக்கப்பட்டவை. அவை அரசாங்கங்களின் இரக்க உணர் வால் கிடைப்பவை அல்ல.