பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


  • நான் உங்களே ஓர் அமைதியான போராட்டத்திற்கு அழைக்கிறேன். அப்போராட்டத்தின்போது மகிழ்ச்சியில் தம்பிக்கையும், துன்பத்தில் சகிப்புணர்ச்சியும் கொள்ள வேண்டும். மக்களினத்திற்குப் பொது எதிரிகளான கொடுங் கோன்மை, வறுமை, பிணி, .ே பார் ஆகியவற்றை எதிர்த் தழிக்கவேண்டும்.”

இ ந் த எதிரிகளே முறியடிக்க மக்களெல்லாரும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற வேறுபாடில்லாமல் உலக நோக்கில் ஒ ன் று பட வேண்டும். மக்களினத்தின் இந்தப் பொதுப் பகைவர்களே ஒழித்துக்கட்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இம்முயற்சியில், நீங்க ளு ம் கலந்து கொள் கிறீர்களா ?

  • ம னி த உரிமையைப் பாதுகாக்கப் போராடும் நல் வாய்ப்பு எல்லாத் தலைமுறையினருக்கும் கிடைப்பதில்லை; நமக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்க மக்களாகிய நாம் ஏற்றி வைக்கும் இவ்விளக்கொளி உலகமெங்கும் பரவட்டும்.”

அமெரிக்கக்குடி மக்களே ! உங்க ளு க் கு ஒன்று கூற விரும்புகிறேன்.”

' அமெரிக்கா உங்களுக்கு எ ன் ன செய்யக் கூடும் ? என்று கேட்காதீர்கள். நீங்கள் அமெரிக்காவுக்கு என்ன செய்யக்கூடும் ? என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்,

  • அன்பிற்குரிய உலக மக்களே ! அமெரிக்கா உங்க ளுக்காக என்ன செய்யக்கூடும்? என்று கேட்காதீர்கள். நாம் எல்லாரும் மனித உரிமையைக் காக்க என்ன செய்யக்கூடும்? என்று கேளுங்கள்.