பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வெள்ளை மாளிகை

கனடாவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் நூறு ஆண்டு களுக்கு முன் பெரும் போரில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்க வீரர்கள் கனடாவிலிருந்த யார்க் நகரைத் தீயிட்டு அழித்து விட்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பழிவாங்குவதற்காகக் கனடி யர்கள் அமெரிக்க நாட்டில் புகுந்து அமெரிக்கத் தலைவரின் மாளிகையைத் தீ யி ட் டு அழித்துவிட்டனர். எரிந்துபோய் வெறும் கற்சுவர்களோடு கூ ண் டு ேப ா ல் நின்ற அம்மா ளிகையை அமெரிக்கர்கள் மீண்டும் புதுப்பித்தனர். தீப்பட்டு எரிந்ததால் கருகிக் கருப்பாய் நின்ற சுவர்களின் நிறத்தை மறைக்க வெள்ளே வண்ணம் பூசப்பட்டது. அன்று முதல் அம்மாளிகையை வெள்ளை மாளிகை என்று அமெரிக்க மக்கள் அழைக்கத் தொடங்கினர். இந்தப் பெயர் நிலைத்து, அமெரிக் கத்தலைவரின் மாளிகையைக் குறிப்பிடும் அதிகார பூர்வமான பெயராகிவிட்டது. வெள்ளே மாளிகையை அ ைம த் த வ ர் திருவாளர் ஹோபன் என்பவர். இவரும் கென்னடியைப் போல இளம் வயதிலேயே பு காழ் பெற்றவர் ; இவருடைய மூதாதையரும் ஐரிஷ்காரரே.

இம்மாளிகையின் சமையலறையைக் க ட் டி முடிக்க முதன் முதலில் முப்பதனுயிரம் டாலர்கள் செலவழிக்கப் பட்டன. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கத் தலைவராக இம்மாளிகையில் குடிபுகுந்தபோது, இச்சமையலறை அவரு டைய மனைவியாருக்குப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும் முப்பதியிைரம் டாலர் செலவில் நவீன வசதிகளோடு இச்ச மையலறை புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்க நாட்டிலேயே மிகச்சிறந்த உணவுகளைத் தயாரிக்கும் ஒருவர் இங்குத் தலை மைச்சமையற்காரராக அமர்த்தப்பட்டிருந்தார். அவர் ஹேய்ஸ் என்ற அமெரிக்கத் தலைவரின் காலத்திலிருந்தவர் ஜான் சேம்பர்லேன் என்ற பெயர் கொண்ட அச்சமையற்காரர் ஒரு