பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


கனின் உரிமையும், பறிக்கப்படுகிறது எ ன் ற உண்மையை எல்லாரும் உணரவேண்டும்.

  • உலக மக்களின் உரிமைகளைப் பறிபோகாமல் காப் பாற்றும் பெரும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிருேம். உலக நாடுகளுக்கு நாம் உதவும்பொழுது அந்நாட்டு மக்கள் கறுப் பர்களா அல்லது வெள்ளேயர்களா என்று நாம் சிந்திப்பதில்லை; பொது நோக்கோடு நடந்துகொள்ளுகிருேம். ஆல்ை அந்தப் பொது நோக்கம் நம் சொந்த நாட்டிலே இல்லை என்பதை எண்ணும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
  • அமெரிக்க நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடி மகனும் நிறவேற்றுமை இல்லாமல், அரசாங்கத்தின் துணை நாடாமல், வீதிகளில் நின்று போராட்டம் நடத்தாமல், தான் விரும்பிய உணவு விடுதியிலோ, படக்காட்சிக் கொட்டகையிலோ, விற்பனை நிலையங்களிலோ, மற்ற எந்தப் பொது விடத்திலோ நுழைவதற்கு உரிமை பெறவேண்டும்; நிற வேறுபாடு கருதா மல் தனது வாக்கைப் பதிவு செய்து, தான் விரும்பும் ஒரு சட்டமன்ற உறுப்பினரைத்தேர்ந்தெடுக்க ஒவ்வோர் அமெரிக் கனும் உரிமை பெறவேண்டும். நீங்கள் உங்கள் குழந்தை கள் எல்லாரும் எப்படி உரிமையோடு நடத்தப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களோ, அதே உரிமையோடு அமெரிக்க நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நடத்தப் படவேண்டும், ஆல்ை இப்போது நம் நாட்டு மக் களி ன் எண்ணம் அப்படி இல்லை.

" நாம் துய்க்கும் உரிமைகளில் கால் பங்குகூடக் கறுப் பர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆல்ை நாம் துய்க்கும் துன்பத் தைப்போல் பன்மடங்கு அவர்கள் தாங்கவேண்டியுள்ளது. வேறுபடுத்தல், ஒதுக்கி வைத்தல் ஆகிய கொடுமைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு ம்ாநிலத்திலும் காணப்படுகின்றன. இவை நம் நாட்டின் அமைதியைக் குலேக்கக் காத்திருக்கும் பேரிடிகள்.