பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

                 80

தாழ்வாரத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது அரசியல் கருத்து வேறு பா டு கொண்ட சிலர் இவர்களே இகழ்ந்து பேசிக் கீழே பிடித்துத் தன்னினர்

  இந்நகரம் வாணிகத்தில் புகழ்பெற்றது ; ஆடம்பரச் சிறப்பு மிக்கது, மிகக் குறைந்த விகிலக்குக் கிடைக்கும் காலுறை முதல், ஒரு மில்லியன் டாலர் விலையுள்ள வைரக்கல் வரை இந்நகரக் கடைத் தெருக்களில் விலைக்கு வாங்க முடியும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் பகுதியிலேயே மிகப் பெரிய வங்கி இந்நகரத்தில்தான் உள்ளது.
       நன்மைச் சிறப்புக்கும் தீமைச் சிறப்புக்கும் மணிமுடி போல் விளங்கும் இந்நகரின் எல்லைக்குள் கென்னடியின் திறந்த உந்து வண்டி நுழைந்தது. கென்னடியின் மனேவி யான ஜாக்குலின் முதன் முறையாக இந்நகருக்கு வருகை தருவதால் இருநூருயிரம் மக்கள் அவளேயும் கென்னடியை யும் காண்பதற்காக வீதியில் இரு மருங்கிலும் கூடியிருந்தனர். முதல் உந்து வ ண் டி யி ல் கென்னடியும் ஜாக்குலினும் இருந்தனர். அவர்களுக்கு அருகில் டெக்சாஸ் மாநில ஆளு நரான திருவாளர் கான்னல்லியும் அவர் மனைவியும் வீற்றிருந் தனர். அடுத்த வண்டியில் அமெரிக்க நாட்டுத் துணைத் தலைவர் லிண்டன் ஜான்சனும் அவர் மனைவியும் வீற்றிருந் தனர். இவர்களுக்குப் பின்னல் பத்து உந்து வண்டிகள் அரசியல் தலைவர்களையும் காவல் வீர ர் க ளே யு ம் தாங்கிக் கொண்டு வந்தன. துனேக்கு ஆயுதந் தாங்கிய வண்டியும் வந்துகொண்டிருந்தது.
 " திருவாளர் கென்னடி ! டல்லாஸ் மக்கள் உங்களே வெறுப்பதாக நீ ங் க ள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே ! உங்களுக்கு ஆதரவாளர்களாக எவ்வளவு மக்கள் கூடியிருக் கின்ருர்கள் பார்த்தீரா ?’ என்று கென்னடியிடம் கூறினர். அருகில் அமர்ந்த ஆளுநர் கான்னல்லி.
 " ஆமாம் ! உண்மைதான் !" என்று புன் முறுவ லோடு விடையிறுத்தார் கென்னடி.