PR ஒரே இரவு! ஒரே இரவு! கமலா, அந்த இரவை நீ மறந்திருக்கமாட்டாய், மறந் திருந்தாலும் இப்போது நினைவுப்படுத்திக்கொள்ளவேண்டும். விதை செடிக்கு தாய் என்பதைப் போல பழைய விஷயம் புதுமைக்குத் தாய். அந்த ஒரே இரவு முதல் இரவுக்குத் தாயாகப்போகிறது. உனக்கும் அந்த இரவுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீ நினைக்கலாம். ஆனால் கமலா, நீயும் நானும் உயிர்த் தோழிகள். நம் கல்லூரி வாழ்க்கையிலே கமலாவும் விமலாவும் அபூர்வ சகோதரிகள் என்று அடுத்தவர்கள் பேசாமல் இருந்தார்களா? 19 கமலா இருக்கும் இடத்தில் விமலா இருப்பாள், விம லா இருக்கும் இடத்தில் கமலா காட்சி அளிப்பாள் என்று எல்லோரும் பேசுவதில்லையா? அப்படி அவர்கள் பேசியது பொய்யா, கமலா? 1. கல்லூரி வகுப்பிலே நீயும் நானும் அடுத்தடுத்தே அமரு வோம்; உன் கூந்தலில் ரோஜா மலர் இருந்தால், என் கூந்தலில் மல்லிகை இருந்ததே இல்லை. நீ காஞ்சிபுரம் கட்டும்போது நான் பெங்களூர் உடுத்துவதில்லை உன்னை அழப்பதாக நினைத்து பேராசிரியர் என்னை ஒருநாள் அழைத்துப் பேசினதில்லையா? நீயும் நானும் கல் லூரி வாழ்விலே இரட்டையளர்களாக இருந்தோம். 13
பக்கம்:கேட்கவில்லை.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை