ஏ. வி. பி. ஆசைத்தம்பி கல்லூரியிலே அவர் நம்கூட படிக்காவிட்டாலும், தின மும் தரிசனம் தர தவறவே மாட்டார். நாம் நாலைந்து பேர்கள் கூடி இருந்தாலும் என்னை மாத்திரம் ஓரக் கண் ணால் பார்த்து, சிரிப்பை எரிந்துவிட்டு செல்வார். 金 L அப்படிப்பட்ட இன்பத்தை போட்டோவிலே பெற முடி யுயா? கண்ணை மூடிக்கொண்டு, நானும் அவரும் ஓடி ஆடி விளையாடுவதுபோல் கற்பனை செய்வதிலே ஒரு தனி இன் பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கண்ணை விழித்துப் பார்கும் போது, எல்லாம் பொய் என்றதும் வேதனை அதி கரிக்கிறது. நேற்று இரவு காண்டேகர் எழுதிய ஒரு புத்தகம் 3 ஒன்று படித்தேன். அதில் வருகிற கதாநாயகி, தூங்கிற தன் அன்பனே முத்தமிடத் துடிக்கிறாள்; முத்தமிடத் தீர்மானித்து, உதடுகளை ஒன்று சேர்க்க குனிகிறாளே தவிர, முத்தமிடவில்லை. ஆனால் நான் முத்தமிட்டேன் அவர் போட்டோவை. என் மனதிலே உள்ள வேதனையை இங்கு நான் யாரி டம் சொல்வது? கல்லூரியில் படிக்கும்போது உன்னிடமா வதுகூறி ஆறுதல் அடைவேன். இப்போது நீயும் அங்கே அவரும் அங்கே! க என்னை பபைத்தியக்காரி என்று சுலபமாக சொல்லி விடுவாய். காதல் காதல் என்று வீணாக வேதனைப் படுகி றேன் என்பாய். உனக்குப் பிரியமான மனோன்மணி இருக்கிறாளே, அவளும் முதலில் காதலை அலட்சியமாக்த் 16
பக்கம்:கேட்கவில்லை.pdf/17
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை