ஒரே இரவு! தான் கருதினாள். ஆனால் அப்புறம் காதலுக்காக கலங்கித் தவித்தாளல்லவா? அதைப்போலத்தான் நீயும். உனக்கு இப்போது புரியாது. அந்த நாளை நினைத்துப் பார். நமது கல்லூரி ஆண்டு விழா நடந்ததே- அந்த நாள்தானே எங்கள் காதலுக்கு ஆரம்ப நாள்? ஒரே இரவு ஒப்பற்ற நாடகம் -ஒரே இரவு-ஒரே பார்வை-ஒரே சிரிப்பு! அங்குதனே காதல் உதயமாயிற்று? ஒரு பார் வையில் உதயமாகக் கூடாது காதல், ஒரு இரவில் உறுதி யாவதில் ஆச்சரியமுண்டா? ஆனால், கமலா! ஒரே இரவு நாடகத்தில் அவரை நான் எதிர் பார்த்தேனா? ஓரத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில்தானடி காதல் ஒளிந்துகொண்டிருந்தது. நான் இருந்த இடத்தில் நீ இருந்திருந்தாலும் தப்பமுடியாது. எய்த அம்பு பாயாமல் என்ன செய்யும்? அவரைப் பார்த்து சிரிக்காமல் இருக்க என்னால் முடிந்ததா? கல்லூரிக் காதல் கானல் நீரைப் போன்றது. சிறைச் சாலை சிநேகிதத்தைப் போன்றது என்றெல்லாம் நீ சொன் னாய். ஆனால்... அவர் என்னை அடைய செய்த முயற்சிகள் கொஞ்சமா என்னை அவர் தனியே சந்திக்க அலைந்த அலைச்சல் கொஞ் சமா? அதிர்ஷ்டவசமாக அவர் தங்கையின் சிநேகிதம். எனக்குக் கிடைத்தது. 17-
பக்கம்:கேட்கவில்லை.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை