பக்கம்:கேட்கவில்லை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ஏ.வி.பி. ஆசைத்தம்பி * ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாருங்கள்' என்று கூப்பிட மாட்டேன் என்கிறாளே. என நினைத்து வேதனைப்பட்டேன். யார் செய்த புண்ணியமோ, அவள் அவ்விதமே அழைத் தாள். நீயும் நானும் எப்படியோ போனோம். அங்கே அவர்... பேச்சு கற்கண்டாக இனிக்கவில்லையா? அப்புறம் கடற்கரையிலே நீயும் நானும் அவரும் அவருடைய தங் கையும் வேர்க்கடலை சாப்பிட்டோம். நீயும் அவர் தங்கையும் கடல் அலைகளோடு விளையாடப் போய் விடுவீர்கள்; நானும் அவரும் காதல் அலையோடு... அன்று இருட்டில் நாம் நால்வரும் நடந்து வந்தோம் விமலா என்று சொல்லி அன்றுதானே உன் முதுகில் தட் டினார்? காதலுக்கு கண் குருடு என்று என்னிடத்திலேயே நீ சொன்னாய். ஆனால்-இருட்டு நேரம் என்பதையும்— நம் இருவர் சாயலும் உருவமும் ஒரே மாதிரி என்பதையும் நீ மறந்து பேசினாய். எப்படியோ போகட்டும் கமலா! கல்லூரிக் காதல் கானல் நீருமல்ல, சிறைச் சிநேகிதமும் அல்ல. அன்பாலும் ஆற்றலாலும் ஆக்கக்கூடிய தாஜ்மஹால்தான். அந்த அற்புதமான தாஜ்மஹாலுக்கு நானும் கேசவும் அஸ்திவாரம் போட்டு விட்டோம். அடுத்தவாரம் வியாழக் கிழமை கல்யாணம். நீ இரண்டு தினங்களுக்கு முன்பே வந்துவிட வேண்டுகிறேன். உன் விமலா. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/19&oldid=1735756" இலிருந்து மீள்விக்கப்பட்டது