ஒரே இரவு! ஒரே இரவு ! 2 முதல் இரவை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான இனிய இரவுகளை சிருஷ்டிக்கட்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்; தினமும் உனக்காக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். உன் நீண்ட கடிதமல்ல, கதை கிடைத்தது. படித்துப் பார்த்தேன். உன் காதல் அதிலும் கல்லூரிக்காதல் வெற் றியடைந்தது உலகில் எட்டாவது அதிசயம்தான். பொதுவாகக் காதல் என்பது எட்டாத எவரெஸ்ட் சிகரந்தான். எவரெஸ்டில் எத்தனையோ பேர்கள் ஏற முயற்சித்தார் கள் முடிவு மரணந்தான். நான் காதல் பாதையிலே கணக்கற்ற பிணங்கள் கிடப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்: காவியத்திலே படித்திருக் கிறேன். இயற்கைகூட காதலுக்கு விரோதி என்று எத்தனையோ இலக்கியங்களில் படித்திருக்கிறேன், லைலாவையும் கய சையும் எடுத்துக்கொள். இயற்கை வாழவிட்டதா? எட்டாத எவரெஸ்ட் டென்சிங் என்பவருக்கு எட்டி விட்டதைப்போல, உன் காதல் கைகூடி விட்டது. டென்சிங்கை பாராட்டுவதைப்போல, நானும் செய்ய வேண்டியதுதான். அதற்குமேல் நான் எனன செய்ய முடியும்? 19
பக்கம்:கேட்கவில்லை.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை