ஒரே இரவு! எந்த "என்ன கமலா இன்னும் அவரை காணோம்? வண்டிக்கு வருவதாகச் சொன்னார்?" என்று கொஞ்சலாகக் கேட்டாள் விமலா, "ஏண்டி அவசரப்படுறே? மாலையில்தான் வரட்டுமே இடையிலே இருப்பது ஒரே இரவு! என்றாள் கமலா. அப்போது வாசல் பக்கம் 'சார்' ஒன்று சப்தம் கேட்டது. எல்லோரும் வாசலைப் பார்த்தார்கள். அவர் வந்துவிட் டாரோ என்ற ஆவலோடு விமலா கமலாவை அழைத்துக் கொண்டு, மாடியில் இருந்து ஓடி வந்தாள். வாகலில் தந்தி பியூன் நின்று கொண்டிருந்தான். ஏண்டி! மாப்பிள்ளை இன்னும் வரவில்லை. அதற்குள் கல் யாண வாழ்த்துக்கள் வர ஆரம்பித்துவிட்டதோ என்று கமலா கேட்டாள். தந்தியை படித்துப் பார்க்க விமலாவின் தந்தை கண்ணா டியை தேடினார். உள் அறையில் இருந்ததால் விமலா, இந்த தந்தியைப் படி". என்று சொல்லி கொடுத்தார். . "தந்தியைப் படித்த விமலா 'ஐயோ அப்பா' என்று அலறினாள். அடுத்த வினாடி விமலா கீழே விழுந்தாள். பரபரப்புடனே கமலா தந்தியை எடுத்துப் படித்தாள். '"என்னம்மா? என்ன தந்தி?" என்று பதறிப்போய் கேட்டார் விமலாவின் தந்தை. "இரயில்வே ஸ்டேஷனில் நடந்த துப்பாக்கிப் பிரயோ கத்தில் கேசவ் இறந்து விட்டாராம்." 23
பக்கம்:கேட்கவில்லை.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை