பக்கம்:கேட்கவில்லை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன்? அவனை ஓடாமல் பிடித்துக் கொண்டான். அவன் ஓடத் திமிறிப் பார்த்தான். வேலைக்காரன் பிடியிலிருந்து அவனால் ஓட முடியவில்லை, அதற்குள் காரில் இருந்தோர் இறங்கி மரத்தை நோக்கி வந்தனர். “இங்கே ஏனடா வந்தீர்கள்!" என்று அதிகாரமாகக் கேட்டான் அவன். எஜமான்! நீங்க இப்படி கோபித்துக்கொண்டு ஓடி வரலாமா? உங்களை எங்கெங்கு தேடி அலைகிறோம் தெரி யுமா? சீதையைத் தேட இராமபிரான்கூட இப்படி ஆள் விட்டதில்லை. தங்கள் தந்தை காரை எடுத்துக்கொண்டே தேடும்படி உத்திரவிட்டார். உங்களைத் தேடி அலைந்ததிலே ஒரு 'தெப்பம்' பெட்ரோல் செலவாகி விட்டது. வாருங் கள் போகலாம்" என்று காரில் வந்தோர் அழைத்தனர். இந்த உரையாடலை, எதிரே இருந்த மாளிகையின் வேலைக்காரனும் கேட்டான். மரத்தடியிலே நின்ற வாலிபன் பெரிய பணக்காரன் என்றும், கோபத்தில் ஓடி வந்திருக் கிறான் என்றும் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்துகொண் காரில் வந்த பெரியவர்களை 'அடே' என்று அழைத் ததிலிருந்து, அவன் ஓர் ஜமீன்தாராக இருக்கவேண்டும் என்று யூகித்தான். டான. எஜமான், நீங்க வந்ததில் இருந்து பெரிய அய்யா சாப்பிடவே இல்லை" என்றார்கள் காரில் வந்தோர். 64 சாகச்சொல்லு. என் வாழ்வைப் பாழ் படுத்த நினை கும்போது, நான் ஓடிவராமல் என்ன செய்வது? என்று கேட்டான் அவன். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/26&oldid=1735763" இலிருந்து மீள்விக்கப்பட்டது