ஏ.வி.பி ஆசைத்தம்பி 'இல்லை, எஜமான்! நீங்கள் இஷ்டப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். இதை பெரிய எஜமான் ஒப்புக்கொண்டுவிட்டார்" என்று கூறினர் காரில் வந்தோர்! இதற்குள் அந்த இடத்திலே கூட்டம் கூடிவிட்டது. மாளிகை வேலைக்காரன், அவனுடைய எஜமான் முருகேச ரிடம் பூரா விபரத்தையும் கூறினான். "இங்கே என்ன தக ராறு? என்று வெளியே வந்துகேட்டார் மாளிகை முருகேசர். இவர் கும்பம்பட்டி ஜமீன்தார் மகன். பேரு சொக்க நாதர். தந்தையோடு கோபித்துக் கொண்டு வந்து விட்டார். தேடி வந்திருக்கிறோம்" என்றனர் காரில் வந்தோர்.• '"அடடே! கும்பம்பட்டி இளைய ஜமீந்தாரா இவர்? வீதியிலே நிற்கலாமா? இது என் மாளிகைதான். உள்ளே வாங்க" என்று கூறி, முருகேசர். எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்றார். ள எல்லா விபரத்தையும் முருகேசர் அறிந்துகொண்டார். இளைய ஜமீன்தார் சொக்கநாதரோ தன்னை அழைக்க காரில் வந்தோரின் பேச்சில் நம்பிக்கைப்படவில்லை. பெரிய ஜமீன் தார் வந்து இஷ்டப்படி கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்று சொல்லி அழைத்தால்தான் வருவேன் என்றும் கூறினார். இளைய ஜமீன்தாரின் பிடிவாதத்தைக் கண்ட முருகேசர், காரில் வந்தவர்களிடம், " பெரிய ஜமீன்தார் வரும்வரை. சொக்கநாதன் என் மாளிகையிலே இருக்கட் டும் என்றார். 26
பக்கம்:கேட்கவில்லை.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை